Advertisment

நான் டிரஸ் மாற்றுவதை அந்த 5 பேரும் பார்த்தாங்க; நக்‌ஷத்ரா நாகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்

உடை மாற்றும் வேனுக்கு அருகில் அமர்ந்திருந்த 5 பேர்; நான் டிரஸ் மாத்துறத பார்த்துக்கிட்டே இருந்தாங்க; கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நக்ஷத்ரா நாகேஷ்

author-image
WebDesk
Sep 10, 2023 16:01 IST
nakshathra nagesh

உடை மாற்றும் வேனுக்கு அருகில் அமர்ந்திருந்த 5 பேர்; நான் டிரஸ் மாத்துறத பார்த்துக்கிட்டே இருந்தாங்க; கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நக்ஷத்ரா நாகேஷ்

சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நக்‌ஷத்ரா நாகேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நக்‌ஷத்ரா நடிகர் ஆர்யா நடித்த 'சேட்டை' படத்தில் காயத்ரியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நக்‌ஷத்ரா நாகேஷ், திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். "என்னை வேனில் போய் உடை மாற்றச் சொன்னார்கள். வேனில் ஜன்னல்கள் இல்லை, கண்ணாடி மட்டும் தான் இருந்தது. ஐந்து பேர் வேனின் வெளியே அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு நான் உடை மாற்றப்போகிறேன் எனத் தெரியும். தெரிந்தும் நகர்ந்து செல்லவில்லை. நான் உடை மாற்றுவதை பார்க்க அமர்த்திருந்தார்கள் போல. எனக்கு வேறு வழி இல்லை. அந்த சூழ்நிலையில் என்னை மறைக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்," என்று நக்‌ஷத்ரா கூறியுள்ளார்.

சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் நக்‌ஷத்ரா தனது நீண்ட நாள் காதலர் ராகவ்-ஐ 2021 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.  ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக, நக்ஷத்ரா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகான படங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியிடுகிறார். நக்‌ஷத்ரா தற்போது தனது கணவர் ராகவ்வுடன் கோவாவில் விடுமுறையில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில், நக்‌ஷத்ரா அவர்களின் பயணத்தின் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த அழகான புகைப்படங்கள் இந்த ஜோடி வானத்தில் விருந்து கொண்டாடுவதைக் காட்டுகிறது. அவர்கள் படங்களுக்கு போஸ் கொடுத்தபோது, ​​நக்ஷத்ரா மற்றும் ராகவ் இருவரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Serial Actress Nakshathra #Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment