கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திர, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
அதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த தன் முத்து மாமாவையும், அவரது குழந்தையையும் நேசிக்கும் அப்பாவி பெண்ணாக நடித்தார். முத்து மாமாவை ஸ்வேதாவிடமிருந்து காப்பாற்ற கடவுளிடம் இவர் செய்த ஒவ்வொரு பிரார்த்தனைகளும் இதுவரை தமிழ் சீரியல் உலகம் பார்க்காதவை.
ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.
இந்த சீரியலில் ஸ்வேதாவாக வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி, கயல் என்ற புதிய சீரியல் மூலம் சன் டிவியில் எண்ட்ரி ஆனார். ஆனால் நக்ஷ்த்திராவை பற்றி எந்த தகவலும் தெரியாமலே இருந்தது. அவரும் கூடிய விரைவில் ஏதாவது புதிய சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதன்படி நக்ஷ்த்திரா, வள்ளி திருமணம் எனும் புதிய சீரியல் மூலம் தற்போது கலர்ஸ் டிவியில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதனால் வெண்ணிலா@ நக்ஷ்த்திராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால், தற்போது புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எல்லாம், பெரியளவில் ஹிட் ஆன படத்தின் பெயர் அல்லது பாடல்களின் முதல் வரியைத் தான் டைட்டிலாக வைக்கின்றனர்.
ஆனால் இந்த சீரியலுக்கு வள்ளி திருமணம் எனும் பிரபல புராண நாடகத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். வள்ளி திருமணம் என்பது, முருக பெருமான் வள்ளியை திருமணம் புரிந்த பிரபல புராண காலத்து கதையாகும். அந்த காலத்து மக்களிடையே, இந்த நாடகம் பெரியளவில் பிரபலமாக இருந்தது. இப்போது கூட நிறைய கோயில் திருவிழாக்களில் இந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
வள்ளி திருமணம் எனும் நாடகத்தின் பெயரை டைட்டிலாக வைத்ததால், இந்த சீரியலிலும் வித்தியாசமான நிறைய கதைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப இந்த சீரியலின் ப்ரோமோ கூட தமிழர்களின் பாராம்பரிய கலையான பொம்மலாட்டம் மூலம், சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் அழகும், அறிவும் நிறைந்த, அசல் கிராமத்துப் பெண்ணான வரும் வள்ளி@பேபிமா, வட்டிக்கு விட்டும் சம்பாதிக்கிறாள். அவளின் அம்மாவாக நளினி நடிக்கிறார். மேலும் பிரபல விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயனும் இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு முக்கியமாக தேனி மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதோ வள்ளி திருமணம் சீரியலின் ப்ரோமோ!
நம்ம வள்ளி எந்த மாறி? வேற மாறி! 😎😎
— Colors Tamil (@ColorsTvTamil) December 8, 2021
வள்ளி திருமணம் | ஜனவரி 3 முதல், இரவு 8 மணிக்கு!#ValliThirumanam | #ValliVeraMaari | #ColorsTamil pic.twitter.com/uftj3174GB
ப்ரோமோ வெளியானதில் இருந்து, ரசிகர்களிடையே இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. இனி வள்ளியை 2022 ஆம் ஆண்டு, ஜனவரி 3 முதல் தினமும் இரவு 8.00 மணிக்கு கலர்ஸ் டிவியில் பார்த்து ரசிக்கலாம். அடக்குமும், அப்பாவித்தனமும் நிறைந்த வெண்ணிலா நம் மனதில் இடம்பிடித்த மாதிரி, இந்த அன்பும், அடாவடியும் நிறைந்த வள்ளி இடம்பிடிக்கிறாளா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
ஏற்கெனவே ஜீ டிவி, பேரன்பு, தெய்வம் தந்த பூவே என்ற புதிய சீரியல்களை வரும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளது. மேலும் ரஜினி என்ற புதிய சீரியலின் ப்ரோமோவும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”