சித்து நினைவுதான் வருகிறது – நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!

Nakshthra Ragav Engagement Pictures சித்துவின் நினைவு வருவதைத் தடுக்கமுடியவில்லை என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.

Nakshthra Ragav Engagement Pictures gone viral Fans reminds of VJ Chithu Tamil News
Nakshthra Ragav Engagement Pictures gone viral

Nakshthra Ragav Engagement Reminds VJ Chithu Tamil News : தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நக்ஷ்த்ரா நாகேஷ். இவருக்கும் தன் நீண்ட நாள் காதலான ராகவ் என்பவருக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் நக்ஷத்ரா. இந்த சந்தோஷ இளம் தம்பதியர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தாலும் பலருக்கு மறைந்த நடிகை சித்துவின் ஞாபகம்தான் வருகிறது.

பொருத்தமான ஜோடி எனப் பல ரசிகர்கள் நக்ஷத்ரா மற்றும் ராகவ் ஜோடியை மனதார வாழ்த்தி வந்தாலும், இவர்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சித்துவின் நினைவு வருவதைத் தடுக்கமுடியவில்லை என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.

Nakshthra Ragav Engagement Pictures gone viral Fans reminds of VJ Chithu Tamil News
Nakshthra Ragav Engagement Pictures gone viral

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் ஹேமந்த் நெருங்கிப் பழகி, ஹேமந்த்தால் அந்த பெண் கருவுற்ற பிறகு அவரை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்த தகவல் சமீபத்தில் வெளியாகி சித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், தன் நண்பரோடு சித்து மரணம் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் ஹேமந்த் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nakshthra Ragav Engagement Pictures gone viral Fans reminds of VJ Chithu Tamil News
Chithu Engagement

சித்து மரணமடைந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில் இன்றும் சித்துவின் நினைவலைகள் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் சென்றடைந்துகொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nakshthra ragav engagement pictures gone viral fans reminds of vj chithu tamil news

Next Story
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்Shivani Bala Som Ramya Bigg Boss Celebrations Vijay Tv Viral Pics Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com