Nakul, Ashwin, Mansoor Ali Khan, Kani Bigg Boss 5 Tamil Contestants : பிக் பாஸ் சீசன் 4 பரபரப்பு அடங்குவதற்குள் ஐந்தாம் சீசன் விரைவில் வரப்போகிறது. வழக்கம்போல இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்காலாஃப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் தனியாக ஒரு லிஸ்ட்டையே ரெடி செய்துவிட்டார்கள் எனலாம்.

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் புகழ், அஷ்வின், பவித்ரா முதல் சென்ற சீசனில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் காணாமல் போன ஷிவானியின் ரீல் ஜோடி அஜீம் வரை இருக்கும் அந்த லிஸ்டில் கமலுக்கு பதிலாக சிம்புதான் இம்முறை ஷோவை வழிநடத்தவுள்ளார் என்கிற பேச்சுகளும் அடிபடுகின்றன. என்ன இருந்தாலும் பிக் பாஸ் மேடை, காமலுக்கான அரசியல் பிரச்சார மேடையாகவும் இருக்கிறதே! விட்டுக்கொடுத்துவிடுவாரா என்ன?

இந்த சூப்பர் லிஸ்ட்டில் நடிகர் நகுல் பெயரும் இடம்பெற்றது. ஆனால், தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக எந்த அழைப்பும் வரவில்லை இதெல்லாம் வெறும் வதந்தி என்றும், அப்படியே அழைப்பு வந்தாலும் தன் குழந்தையை விட்டுச் செல்ல முடியாது என்றும் தானே பேசி பதிவு செய்த வீடியோவை வலைத்தளத்தில் அப்லோட் செய்திருக்கிறார் நகுல்.
மேலும், மக்களின் இந்த விருப்பமான லிஸ்ட்டில் குக் வித் கோமாளி பிரபலங்களான கனி, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகியோர் உள்ளனர். மேலும், சூப்பர் சிங்கர் சாம் விஷால், சீரியல் நடிகர் அஜீம் ஆகியோர் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வையாபுரி, பொன்னம்பலம் என முன்னாள் நடிகர்கள் இதில் பங்குபெறுவது வழக்கம். அந்த வரிசையில் மன்சூர் அலிகான் இந்த லிஸ்ட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil