/tamil-ie/media/media_files/uploads/2020/07/Namitha-Gauthami-Madhuvanthi-Kutty-Padmini-selected-as-BJP-executive-committee-member.jpg)
Namitha, Gauthami, Madhuvanthi, Kutty Padmini selected as BJP executive committee member
Tamil Nadu BJP, Executive Committee Members: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அக்கட்சியின் புதிய நிர்வாகிகளை இன்று அறிவித்துள்ளார். அதன்படி திமுக-விலிருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி
இதற்கிடையே தமிழ் சினிமா பிரபலங்களும் தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், கெளதமி, நமீதா, மதுவந்தி, குட்டி பத்மினி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிமுக-விலிருந்து பாஜக-வில் இணைந்த நமீதா, மத்திய சென்னை கிழக்கின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 3, 2020
அப்பாவைப் போலவே அமைதியான முகம், நண்பர்களுடன் சஞ்சய் – வைரலாகும் படம்
நடிகை கெளதமி கிழக்கு சென்னை செயற்குழு உறுப்பினராகவும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, தென் சென்னை செயற்குழு உறுப்பினராகவும், சினிமா - சின்னத்திரை பிரபலம் குட்டி பத்மினி, மத்திய சென்னை கிழக்குப் பகுதி செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.