/tamil-ie/media/media_files/uploads/2019/09/Namma-Veettu-Pillai.jpg)
Namma Veettu Pillai Box Office Collection Day 1
Namma Veettu Pillai box office collection: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் நேற்று வெளியானது.
அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். “பாசமலர்” படத்தின் இரண்டாவது பாகம் என்று சொல்லும் அளவுக்கு அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, கூடவே குடும்ப சென்டிமென்ட்டையும் தூவி கடைக்குட்டி சிங்கம் படத்தைப்போலவே ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தையும் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.
#NammaVeettuPillai - Exact first day numbers around 6 - 6.5 Crores. Expecting the same numbers to repeat today and tomorrow will see atleast 1 crore increase .
— Prashanth Rangaswamy (@itisprashanth) September 28, 2019
சமீபமாக தோல்விகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன், மீண்டும் வெற்றி பெறுவதற்கு நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜுடன் மீண்டும் இணைந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான இப்படம், முதல் நாளில் சென்னையில் மட்டும் சுமார் 58 லட்சம் வசூலித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் 6 முதல் 61/2 கோடி வரை வசூலித்து இருக்கும் எனத் தெரிகிறது. சனி, ஞாயிறு வார இறுதியில் இதன் வசூல் சற்று உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.