/tamil-ie/media/media_files/uploads/2019/09/a14.jpg)
Namma Veettu Pillai Official Trailer Sivakarthikeyan Sun Pictures Pandiraj D.Imman - 'சொந்தத்துக்குள்ள தோற்க தயாரா இருப்பவன யாராலும் ஜெயிக்க முடியாது' - வெளியானது நம்ம வீட்டுப்
Namma Veetu Pillai Official Trailer: கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்குப் பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் படம், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை டி.இமான்.
கடந்த மே மாதம் 'நம்ம வீட்டு பிள்ளை' படபிடிப்பு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதனை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. பார்த்து பார்த்து அலுத்துப் போன காதல் காட்சிகளுக்கும், கவர்ச்சி ஆட்டங்களுக்கும் இடையே இது போன்ற குடும்ப உறவுகளை பேசும் படங்களைப் பார்க்கும் போது, உண்மையிலேயே 1970, 80களில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
'சொந்தம் மாதிரி யாராலும் சந்தோசத்தை கொடுக்கவும் முடியாது; சொந்தம் மாதிரி யாராலும் கஷ்டப்படுத்தவும் முடியாது' , 'சொந்தத்துக்குள்ளேயே தோத்துப் போக தயாரா இருக்குறவன யாராலும் ஜெயிக்க முடியாது' போன்ற டிரைலரில் வரும் வசனங்களே சொல்கிறது படத்தின் ஒர்த் என்னவென்று.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.