Namma Veettu Pillai in Tamilrockers: நீதிமன்ற உத்தரவையும் மீறி ’நம்ம வீட்டு பிள்ளையை’ ’லீக்’ செய்த தமிழ்ராக்கர்ஸ்
Namma Veettu Pillai Full Movie Leaked in Tamilrockers: ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை 6,455 இணையதளத்தில் வெளியிடவும், பதிவிறக்கம் மற்றும் தரவிறக்கம் செய்யவும் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
Namma Veettu Pillai Full Movie Leaked in Tamilrockers: ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை 6,455 இணையதளத்தில் வெளியிடவும், பதிவிறக்கம் மற்றும் தரவிறக்கம் செய்யவும் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
Namma Veettu Pillai Full Movie Leaked in Tamilrockers for Free Download: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் நேற்று வெளியானது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
Advertisment
இந்நிலையில், இணையதளங்கள் மற்றும் கேபிள் நிறுவனங்கள் இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமையன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ் குமார், ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை 6,455 இணையதளத்தில் வெளியிடவும், பதிவிறக்கம் மற்றும் தரவிறக்கம் செய்யவும் தடை விதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதோடு, லோக்கல் கேபிள் டிவி சேனல்களிலும் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
ஒரு வழியாக இனி ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை இனையத்தில் லீக் செய்ய முடியாது என படக்குழுவினர் பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி, சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை ஆன்லைனில் லீக் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
Advertisment
Advertisements
இதனால், படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் என கலக்கத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.