இது பிரக்னன்சி டான்ஸ் ஷூட்: சன் டிவி சீரியல் நடிகை க்யூட் வீடியோ
பிரக்னன்ஸி ஷீட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் கீர்த்தி பகிர்ந்துள்ளது தற்போது, வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கீர்த்தியின் பிரக்னன்ஸி சர்ப்ரைஸ்க்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர்.
Serial Actress Keerthi Dhanush Pregnancy Dance Shoot Viral Video : சினிமா நடிகர்களை காட்டிலும், வருடத்தின் அனைத்து நாள்களிலும் ரசிகர்களோடு ஒன்றி, நெருக்கமான உணர்வுகளை தமிழ் சீரியல் நடிகர், நடிகைகள் ஏற்படுத்தி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற சீரியல் நந்தினி. பல த்ரில் தொடர்களை தமிழ் சீரியல் ரசிகர்கள் கண்டு கழித்திருந்தாலும், நந்தினி சீரியல் ஒளிபரப்பான காலங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது.
Advertisment
நந்தினி சீரியலில், இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ஃபேன் பேஜ் க்ரியேட் செய்து விவாதித்து வந்தார்கள் என்றால் எவ்வளவு ஹிட் என்பது உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டும்.
நந்தினி சீரியலில், மாயா ரோலில் நடித்து ரசிகர்களை அசர வைத்தவர் கீர்த்தி தனுஷ். நந்தினி சீரியலை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து, பெரும் ரசிகர் படையை தனக்கென திரட்டியவர் கீர்த்தி. தன்னுடன் நடித்த ஜெய் தனுஷ் என்பவரையே திருமணம் செய்து கொண்டார்.
Advertisment
Advertisement
தற்போது, சன் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண பரிசு சீரியலில், கீர்த்தி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி கர்ப்பம் ஆகி உள்ளார். அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் , தற்போது பிரக்னன்ஸி ஷீட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் கீர்த்தி பகிர்ந்துள்ளது தற்போது, வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கீர்த்தியின் பிரக்னன்ஸி சர்ப்ரைஸ்க்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர்.