ப்ரண்டா இருந்தா ஓகே, ஆனா லவ்வர், கணவரா‌ என்னால இருக்க முடியாது; வி.ஜே.வைஷு புகார் குறித்து நாஞ்சில் விஜயன் விளக்கம்!

விஜே வைஷூ அளித்த புகாரின்பேரில் சர்ச்சையில் சிக்கியுள்ள நாஞ்சில் விஜயன் நேர்க்காணல் ஒன்றில் இதற்கு தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

விஜே வைஷூ அளித்த புகாரின்பேரில் சர்ச்சையில் சிக்கியுள்ள நாஞ்சில் விஜயன் நேர்க்காணல் ஒன்றில் இதற்கு தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nanjil vijayan

யூடியூபர் நாஞ்சில் விஜயன் மற்றும் தொகுப்பாளர் வி.ஜே. வைஷு ஆகியோருக்கு இடையேயான சர்ச்சைக்கு, நாஞ்சில் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். வி.ஜே. வைஷு அளித்த புகார் குறித்து நாஞ்சில் விஜயன் கலாட்டா பிங்க் அளித்த நேர்க்காணலில் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒரு இந்திய நடிகர் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரம். மிமிக்ரி மற்றும் நகைச்சுவைத் திறன்களுக்காக அறியப்பட்ட இவர், பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் மிகவும் பிரபலமானவர்.

Advertisment

சமீபத்தில், திருநங்கை வைஷு என்பவர் அளித்த புகார் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள நாஞ்சில் வின் இந்தப் புகார் குறித்து அவர் தனது விளக்கத்தையும் அளித்துள்ளார். வைஷு, தான் நாஞ்சில் விஜயனுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் தனது மனைவி மற்றும் குடும்பம் காரணமாக தன்னை ஒதுக்கியதாகவும் குற்றம் சாட்டினார். இதை மறுத்த நாஞ்சில் விஜயன், தான் வைஷுவை ஒரு நண்பராக மட்டுமே பார்த்ததாகவும், ஆனால் வைஷு உறவில் முன்னேற விரும்பியதால், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக விலகியதாக தெரிவித்தார். மேலும், வைஷு நள்ளிரவில் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் மூலம் தொந்தரவு செய்ததால், தன் மனைவியுடன் சண்டை வந்ததாகவும், அதன் காரணமாக வைஷுவை பிளாக் செய்ததாகவும் கூறினார்.

நாஞ்சில் விஜயனின் மாமியார், வைஷுவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறினார். நாஞ்சில் விஜயன் தனது மகளுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்தார் என்றும், வைஷுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தன் மகள் மீது சத்தியம் செய்து கூறினார். மேலும், வைஷுவின் இந்த நடவடிக்கையால் தங்கள் குடும்பம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு தாய் என்ற முறையில் வைஷுவின் செயல் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். 

Advertisment
Advertisements

ஒரு பெண், மற்றொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் வைஷுவிடம் கேட்டுக் கொண்டார். மேலும் நட்பாக அவர் பழகுவது எனக்கு பிரச்சனை இல்லை என்றும் அதை தாண்டி போகும்போது அதை தாண்டி என்னால் இருக்க முடியாது என்றார். இந்த சண்டைகளுக்கு பிறகு வைஷு, தான் நாஞ்சில் விஜயனின் குடும்ப வாழ்க்கையை கெடுக்க விரும்பவில்லை என்றும், பழையபடி ஒரு நண்பராக பழகினாலே போதும் என்று விரும்புவதாகவும் கூறினார்.  

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: