சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன் தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பரிசுப் பொருள் வந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டில் உள்ளே போகப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக். 1-ம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள், இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சரவுக்கு பஞ்சமில்லை.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் வார முடிவில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அனன்யா வெளியேற்றப்பட்டார்.
எழுத்தாளர் பவா செல்லதுரை, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பவா செல்லத்துரை வெளியேறியதால், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் கிடையாது என்ற அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன், பிக் பாஸிலிருந்து ஒரு பரிசுப் பொருள் வந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனால், அந்த பரிசுப்பொருள் என்ன என்பதை நாஞ்சில் விஜயன் தெரிவிக்கவில்லை.
இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பரிசுப் பொருள் வந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதால், நாஞ்சில் விஜயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டில் உள்ளே போகப் போகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
சமீபத்தில்தான் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லமாட்டார் எனவும் நெட்டிசன்கள் சிலர் பேசி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“