ஓய், பொண்டாட்டி, என்னடி பண்ற... திருநங்கை புகாருக்கு மாதம்பட்டி ஸ்டைலில் ரிப்ளே கொடுத்த நாஞ்சில் விஜயன்!

மாதம்பட்டி ரங்கராஜின் இந்த வீடியோ வைரலான நிலையில் இதே போல் குரேஷியும் கிண்டல் செய்து வீடியோ போட்டிருந்தார். அந்த வகையில் தற்போது நாஞ்சில் விஜயனும் தனது மனைவி மரியாவிடம் பேசுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜின் இந்த வீடியோ வைரலான நிலையில் இதே போல் குரேஷியும் கிண்டல் செய்து வீடியோ போட்டிருந்தார். அந்த வகையில் தற்போது நாஞ்சில் விஜயனும் தனது மனைவி மரியாவிடம் பேசுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
download (10)

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாஞ்சில் விஜயன், பின்னர் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்களை சம்பாதித்தார். மிமிக்ரி மற்றும் நகைச்சுவையில் தனது தனித்துவத்தால் பேசப்படும் இவர், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பாக எதையும் வெளிப்படையாகச் சொல்லியதில்லை. ஆனால் தற்போது, ஒரு திருநங்கையால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் மையத்தில், நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

அந்த புகாரில், நாஞ்சில் விஜயனும் திருநங்கையும் கடந்த ஏழு ஆண்டுகளாக நெருங்கிய உறவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் பேசாமல், தன்னை தவிர்த்து வருவதாகவும், எந்த விளக்கமும் அளிக்காமல் விலகியுள்ளதாகவும் அந்த திருநங்கை கூறியுள்ளார். மேலும், இந்தத் தனிமையைத் தவிர்த்து, தங்களின் பழைய நட்பை மீண்டும் இணைத்துவைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது தற்போது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் மீது அவரது இரண்டாவது மனைவி புகார் அளித்திருந்தார். அதை பார்த்துத்தான் தனக்கு தைரியம் வந்ததாக இந்த திருநங்கை தெரிவித்துள்ளார். இதனால், சினிமா பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து நாஞ்சில் விஜயன் ஒரு வீடியோவில் பேசுகையில், "ஹோய்! என்னடி பண்ற பொண்டாட்டி, மிஸ் யூ, லவ் யூ, ஷூட்டிங் வந்துட்டேன், மேக்கப் போட்டுட்டேன், பெர்ஃபார்ம் செய்ய போறேன், யாரு எது சொன்னாலும் நம்பாதே, என்றைக்கும் உனக்கு நான், எனக்கு நீதான், பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோ, மிஸ் யூ" என கூறிக் கொண்டிருக்கும் போது போலீஸ் கெட்டப்பில் வந்த ஒருவரை பார்த்து நாஞ்சில் விஜயன் பயப்படுவது போல் "சார் சார் நான் எதுவும் பண்ணலை" என்கிறார். உடன் இருப்பவர், யோவ் போலீஸ் கெட்டப்பில் பெர்ஃபார்ம் செய்ய வந்திருக்கிறார் என்கிறார்.

Advertisment
Advertisements

மாதம்பட்டி ரங்கராஜின் இந்த வீடியோ வைரலான நிலையில் இதே போல் குரேஷியும் கிண்டல் செய்து வீடியோ போட்டிருந்தார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்தனர். ஒரு பெண் தன்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார் என கூறி தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால், இப்படித்தான் கிண்டல் செய்வதா என கேட்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது நாஞ்சில் விஜயனும் தனது மனைவி மரியாவிடம் பேசுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யார் என்ன சொன்னாலும் நம்பாதே என திருநங்கை புகாரை தெரிவித்துள்ளார். மேலும் அந்த இன்ஸ்டா வீடியோவில் "நம்மை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் நம்முடைய சிரிப்பாக தான் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: