/indian-express-tamil/media/media_files/2025/09/02/akshaya-dhanush-2025-09-02-12-10-40.jpg)
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கும், அக்ஷயாவிற்கும் நடந்த திருமணம் பிரபலங்கள் குடும்பத்தில் நடக்கும் ஆடம்பரமான திருமணங்களுக்கு ஒரு மாறுபட்ட உதாரணமாக அமைந்தது. நெப்போலியனின் மகன் தனுஷ் ஒரு தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது திருமணம் கடந்த நவம்பர் மாதம் ஜப்பானில் நடந்தது. இந்தத் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தத் திருமணம் மிகப் பி ரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமணம் தொடர்பாக சில சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. இருப்பினும், அக்ஷ்யா தனுஷை விரும்பி திருமணம் செய்துகொண்டதாகவும், இந்தத் திருமணத்திற்கு அவரது முழு சம்மதம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அக்ஷயாவின் பெற்றோர்கள் பிஹைன்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர். திருமணம் முழுக்க முழுக்க அக்ஷயாவின் விருப்பத்திலேயே நடந்ததாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அக்ஷயாவின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அக்ஷயாவின் பெற்றோர்கள், நடிகர் நெப்போலியன் குடும்பத்தின் எளிமையைக் கண்டு வியந்து போனதாகத் தெரிவித்தனர். நிச்சயதார்த்தத்தின்போது வெறும் ஏழு விருந்தினர்களுடன் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தாலும், நெப்போலியனின் வீட்டில் இருபத்திமூன்று விருந்தினர்கள் இருந்ததாகவும், அனைவரும் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் பழகியதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
அக்ஷயா, தனுஷை திருமணம் செய்துகொள்ள உறுதியாக இருந்ததாகவும், அவளது மகிழ்ச்சியை மனதில் கொண்டே தாங்கள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் பெற்றோர் கூறினர். திருமணப் பேச்சுகள் நடந்தபோது, வெளிநாட்டிலிருந்து திரும்பிய தங்கள் மகளுக்கு, மாப்பிள்ளைத் தரப்பில் முதலில் ஒரு ஐபோன் பரிசளித்ததையும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
அக்ஷயா - தனுஷ் திருமணம் பற்றி பலரும் பல கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதில் நெப்போலியன் சம்மந்தியான அக்ஷயாவின் பெற்றோர்கள் பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்களும் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமானது அக்ஷயாவின் அம்மா 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலூம் மும்பையில் படித்ததால் தனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகள் தெரியும் என்று கூறினார். மேலும் நெப்போலியன் குடும்பத்தில் அனைவரும் நன்றாக பழகுவதாக கூறினார். திருமணத்தின் போது சிந்திய கண்ணீர், மகிழ்ச்சியான கண்ணீர் என்றும், தன் மகள் நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்ததாக அக்சயாவின் தாய் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.