வீட்டை சுற்றி மூலிகை, சாணியில் இயற்கை எரிவாயு; விவசாயத்தில் புதுமை செய்யும் நெப்போலியன் அண்ணன் ஹோம் டூர் வைரல்!

"இது என்ன வித்தியாசம்? நொலி கலர் பிங்க் கலரா இருக்கே!" என்று நம்மை வியக்க வைக்கும் அரிய வகைச் செடிகள் முதல், சித்த மருத்துவத்தில் போற்றப்படும் அத்தனை அரிய மூலிகைகளும் அங்கே செழித்து வளர்கின்றன.

"இது என்ன வித்தியாசம்? நொலி கலர் பிங்க் கலரா இருக்கே!" என்று நம்மை வியக்க வைக்கும் அரிய வகைச் செடிகள் முதல், சித்த மருத்துவத்தில் போற்றப்படும் அத்தனை அரிய மூலிகைகளும் அங்கே செழித்து வளர்கின்றன.

author-image
WebDesk
New Update
Home tour 1

Napoleon brother home tour Trichy

நடிகர் நெப்போலியனின் அண்ணன் கிருபாகரன், திருச்சி நகரில் வசித்து வருகிறார். 

Advertisment

திருச்சி நகரின் ஆரவாரத்துக்கு மத்தியில், கிருபாகரன் வீடு ஒரு அமைதியான சோலையாக, நம்மை இயற்கையோடு இணைக்கிறது. வீட்டின் வாசலிலேயே பிள்ளையார் சிலை நம்மை புன்னகையுடன் வரவேற்க, உள்ளே நுழைந்தால் கண்முன்னே விரிகிறது ஒரு பிரம்மாண்டமான மூலிகைத் தோட்டம்! "இது என்ன வித்தியாசம்? நொலி கலர் பிங்க் கலரா இருக்கே!" என்று நம்மை வியக்க வைக்கும் அரிய வகைச் செடிகள் முதல் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளும் அங்கே செழித்து வளர்கின்றன.
 
இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வை அவர் இங்கு வாழ்கிறார்.

அவரது வீட்டில், மாட்டுச் சாணம், காய்கறி கழிவில் இருந்து இயற்கை எரிவாயு (Biogas) உற்பத்தி செய்யும் முறை பலரையும் மலைக்க வைக்கிறது. வீட்டின் சமையல் எரிவாயு தேவையை மாட்டுச் சாணத்திலிருந்து கிடைக்கும் பயோகேஸ் மூலம் பூர்த்தி செய்து, ரசாயன எரிபொருட்களின் தேவையை குறைத்திருக்கிறார். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல், செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கிறது.

Advertisment
Advertisements

கிருபாகரன் தனது பிரம்மாண்டமான விவசாய நிலத்தில் பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிட்டுள்ளார்.  "இதெல்லாம் கூட பயிரிடலாமா? இப்படி எல்லாம் கூட விவசாயம் பண்ணலாமா?" என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு புதுமையான விவசாய முறைகளை அவர் கடைபிடிக்கிறார். அவரது புதுமையான விவசாய முறைகள் பலரை ஆச்சரியப்பட வைக்கும்.

Home tour

நெப்போலியன் குறித்து கிருபாகரன் கூறுகையில், ‘நெப்போலியனுக்கு எந்தவிதமான மது அல்லது புகைப்பழக்கமும் இல்லை, அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலவே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.

நெப்போலியனின் மனைவி அவரது சொந்தம் இல்லை, வெளியிலிருந்து பெண் பார்த்தே திருமணம் நடைபெற்றது. சினிமா துறையில் இருந்ததால் பல ஜாதகப் பொருத்தங்கள் அமைந்தும், சினிமா பின்னணி காரணமாக சில இடங்களில் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இறுதியில் தற்போதைய மனைவி திருச்சியில் வசித்தவர்,’ என்றார். 

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: