வீட்டுக்கு வந்த மருமகள்; விழா போல் கொண்டாடிய நெப்போலியன் குடும்பம்: வதந்திகளுக்கு விழுந்த பலத்த அடி!

தனது மருமகள் அக்‌ஷயா, மீண்டும் வீடு திரும்பிய நிகழ்வை நடிகரும், தொழிலதிபருமான நெப்போலியன், திருவிழா போன்று கொண்டாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது மருமகள் அக்‌ஷயா, மீண்டும் வீடு திரும்பிய நிகழ்வை நடிகரும், தொழிலதிபருமான நெப்போலியன், திருவிழா போன்று கொண்டாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Napoleon family

பிரபல நடிகரும், தொழிலதிபருமான நெப்போலியன், தன்னுடைய மருமகள் மீண்டும் வீட்டிற்கு வந்த நிகழ்வை பெரும் விழா போன்று கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமா உலகில் வில்லனாக அறிமுகமான நெப்போலியன், அதன் பின்னர் கதாநாயகன், குணச்சத்திர வேடங்களில் அசத்தினார். இவரது நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி ஆகிய படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. சினிமா மட்டுமின்றி அரசியல் களத்திலும் நெப்போலியன் வெற்றிகரமாக வலம் வந்தார். குறிப்பாக, மத்திய அமைச்சர் அந்தஸ்த்திற்கு நெப்போலியன் உயர்ந்தார்.

தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வரும் நெப்போலியன், அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நெப்போலியனின் மகன் தனுஷுக்கும், அக்‌ஷயா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளியான தனுஷுக்கும், அக்‌ஷயாவிற்கும் இடையே நடைபெற்ற திருமணத்திற்கு திரைத்துறையினர் மட்டுமின்றி, சாமானிய மக்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். எனினும், இதற்கு சிலர் விமர்சனங்கள் என்ற பெயரில் ட்ரோல்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு செவி சாய்க்காத தம்பதி, தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

இந்த சூழலில் அண்மை நாட்களில் நெப்போலியன் வீட்டில் அக்‌ஷயா வசிக்கவில்லை என்ற ஒரு வதந்தி பரவியது. தம்பதி இருவரும் பிரிந்து விட்டதாகவும், சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினர். சமீபத்தில் நெப்போலியன் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் அக்‌ஷயாவை காணவில்லை என்று பலரும் கூறினர். இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெப்போலியன் பதிவிட்டுள்ளார். அதில், தங்கள் வீட்டிற்கு வருகை தரும் மருமகள் அக்‌ஷயாவிற்கு நெப்போலியன் குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment
Advertisements

 

 

குறிப்பாக, தனது மருமகள் வீடு திரும்பியதை ஒரு திருவிழா போன்று நெப்போலியன் கொண்டாடியுள்ளார். அக்‌ஷயாவின் கணவரான தனுஷும் இந்த வீடியோவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். நெப்போலியன் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக யூடியூபர்கள் சுதாகர் மற்றும் கோபி உள்ளிட்ட பலர் நெப்போலியன் வீட்டிற்கு சென்று தனுஷை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: