Advertisment
Presenting Partner
Desktop GIF

4-வது திருமணம்; அம்மா நடிகையை மணக்கும் 60 வயது நடிகர்: உதட்டோடு முத்தமிட்டு வீடியோ

தெலுங்கு நடிகரும்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் 60 வயதாகும் நரேஷ், பிரபல அம்மா நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்துகொள்ள உள்ளதை உதட்டோடு முத்தமிட்டு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
4-வது திருமணம்; அம்மா நடிகையை மணக்கும் 60 வயது நடிகர்: உதட்டோடு முத்தமிட்டு வீடியோ

தெலுங்கு நடிகரும்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் 60 வயதாகும் நரேஷ், பிரபல அம்மா நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்துகொள்ள உள்ளதை உதட்டோடு முத்தமிட்டு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா. இவர் திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயினுகு அம்மா நடித்து புகழ் பெற்றவர். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகரும்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. நரேஷ் பாபு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நரேஷ் பாபு 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணமும் அண்மையில் விவாகரத்தில் முடிந்தது.

நரேஷும், பவித்ராவும் காதலித்து வந்த நிலையில், அண்மையில், மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி நரேஷும், பவித்ராவும் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டு ரகளை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நரேஷையும், பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

அப்போது, நரேஷையும் பவித்ராவையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கிண்டல் செய்தார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

நரேஷ் - பவித்ரா லோகேஷ் 2018-ம் ஆண்டு 'சம்மோகனம்' படத்தில்தான் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். நரேஷ் - பவித்ரா இருவரும் 'அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி', 'மிடில் கிளாஸ் அப்பா', 'ஹேப்பி வெட்டிங்', 'ராமராவ் ஆன் டூட்டி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நரேஷ் - பவித்ரா காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்நிலையில், 60 வயதாகும் நடிகர் நரேஷ், தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு அறிமுகம் செய்து தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் வெளியிட்டு உள்ள புத்தாண்டு செய்தியில் "புதிய ஆண்டு. புதிய தொடக்கங்கள். உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். - பவித்ரா நரேஷ்," என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Telugu Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment