பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, நியூயார்க் நகரின் குயின்ஸில் உள்ள ஜமைக்காவில் தனது முன்னாள் காதலர் மற்றும் அவரது தோழி ஆகியோரை கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு தீ வைத்ததால், இருவரும் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Nargis Fakhri’s sister Aliya arrested for murdering ex-boyfriend and his friend; screamed ‘you’re all going to die today’
அலியாவின் முன்னாள் காதலர் எட்வர்ட் ஜேக்கப்ஸ் மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டின் கராஜ் பகுதியில் அலியா தீ வைத்ததால் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த நவம்பர் 27-ஆம் தேதி அலியா ரிமாண்ட் செய்யப்பட்டார். அடுத்தகட்ட விசாரணைக்கு வரும் டிசம்பர் 9-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 2-ஆம் தேதி காலை சுமார் 6:20 மணிக்கு அவர் இச்செயலை செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், எட்வர்டை நோக்கி "நீங்கள் எல்லோரும் சாகப்போகிறீர்கள்" என அலியா கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.
"வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதை கண்டறிந்த எட்டியென், ஜேக்கபை காப்பாற்றுவதற்காக விரைந்துள்ளார். அப்போது ஜேக்கப் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வீடு முழுவதும் தீ பரவியது. இதில் இருவரும் தப்பிக்க முடியாமல் போனது" என கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதில் உயிரிழந்த ஜேக்கப்ஸ் பிளம்பராக பணியாற்றி வந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஜேக்கப், அலியாவுடனான தனது உறவை கடந்த ஓராண்டுக்கு முன்பு முறித்துக் கொண்டார். எனினும், இந்த பிரிவை அலியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, உயிரிழந்த ஜேக்கப்ஸ் மற்றும் எட்டியென் இருவரும் நண்பர்கள் என ஜேக்கப்ஸின் தாயார் கூறியுள்ளார்.
அலியாவின் தாயார், தன் மகள் மீதான கொலை குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன் மகள் கொலை செய்வார் என தான் கருதவில்லை எனவும், அவர் எல்லோர் மீதும் அன்பு கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.