/tamil-ie/media/media_files/uploads/2022/08/A-still-from-Natchathiram-Nagargiradhu.jpg)
தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்களான, பொது சமூகத்தினர் கொண்டாடும் பொம்மி (சூரரை போற்று), ஷோபனா (திருச்சிற்றம்பலம்), யாமினி (மயக்கம் என்ன) போன்றவர்களுக்கு நடுவில் நமக்கு வரமாக வந்திருக்கிறது ரேனி காதாபத்திரம்.
ஆண்களின் சுமையை ஏற்றுகொள்ளும், அவர்களை சூழ்ந்தே வாழும் பெண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த சமூகத்தின் பார்வை சரியா என்று ரெனி நம்மிடம் உரையாடுகிறார். ரஞ்சித் நேர்காணல்களில் கூறியதுபோல படம் முக்கிய காதலின் அரசியலை பேசியிருக்கிறது. ரெனி (துஷாரா) மற்றும் இனியன் ( காளிதாஸ்) ஒன்றாக காதலில் கூடியிருக்கையில் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார் ரெனி. இது காதல் , கல்யாணம் என்று விரிவடைகிறது. இந்நிலையில் இது இனியனால் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. மேலும் அவர் இளையராகாவின் இசை பயணத்தை பற்றியும் அவர் சாதி அரசியலால் ஒடுக்கப்பட்டதையும் அவர் கூறுகிறார். இதை ஏற்றுகொள்ள மறுக்கும் இனியன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இத்திரைப்படத்தில் ரஞ்சித் புதிய கதை சொல்லும் முறையை கையாண்டிருக்கிறார். கோர்வையாக கதையை வெளிப்படுத்தாமல், துண்டுகளாக நிகழ்வுகளின் போக்கில் கதை சொல்கிறார். இத்திரைப்படமே நடிகர்களின் முக பாவங்களாலேயே வெற்றிபெற்றுள்ளது. கலையரசனின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போதே, அவரை வெறுக்க வேண்டும் என்று இயக்குநர் வடிவமைக்கவில்லை. அவரிடம் மனிதம் பூக்க வேண்டும் என்ற தருணங்களை அவர் வழங்குகிறார். இத்திரைப்படத்தில் நடைபெறும் நாடகம் அது பேசும் அரசியல் முழுவதும் காதலை ஆழமாக அலசியிருக்கிறது.
சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இதுபோல துணிவான கதையை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தற்காக இயக்குநர் ரஞ்சித்தை பாராட்டியே ஆகவேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.