நடிகர் நெடுமுடி வேணு மரணம்; திரையுலகினர் அஞ்சலி

தமிழில் சர்வம் தாள மயம், அந்நியன், இந்தியன் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nedumudi Venu passes away
PC @pcsreeram

National Award-winning actor Nedumudi Venu passes away : தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு உடல் நலக் கோளாறு காரணமாக தன்னுடைய 73 வயதில் மரணம் அடைந்தார். கல்லீரல் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் மரணத்தை தழுவினார்.

நெடுமுடி வேணு தன்னுடைய வாழ்வை மேடை நாடக நடிகராக துவங்கினார். இயக்குநர் அரவிந்தன் இயக்கிய படத்தில் 1978ம் ஆண்டு அறிமுகமான அவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிகமாக நடித்து வந்தார். தன்னுடைய வாழ்நாளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் தங்களின் இரங்கல் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழில் சர்வம் தாள மயம், அந்நியன், இந்தியன் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: National award winning actor nedumudi venu passes away

Next Story
பண்டிகை இல்லாத நாளில் இப்படி ஓபனிங் யாருக்கு சாத்தியம்?siva karthikeyan, Siva Karthikeyan doctor movie released, Doctor movie released in normal day, சிவகார்த்திகேயன், டாக்டர் திரைப்படம், சாதாரண நாளில் வெளியான டாக்டர் திரைப்படம், திராவிட ஜீவா, கமர்சியல் கிங் சிவகார்த்திகேயன், Siva Karthikeyan doctor movie receives family audience, tamil cinema news, comercial king siva karthikeyan, siva karthikeyan superhit, Dravida Jeeva
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X