திரைப்பட இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் மரணம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

director s.p Jananathan: இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது

S. P. Jananathan passes away, Director S. P. Jananathan

Tamil Cinema director s.p Jananathan passes away: இயற்கை, ஈ, பேராண்மை , புறம்போக்கு என்கிற பொதுவடமை உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் ஜனநாதன் இயற்கை எய்தினார். அவருக்கு, வயது 61

இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கரை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். காவல் நடைமுறைச்சட்ட மூலம் பற்றிய இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி உள்ளிடோர் நடித்திருந்தனர்.

சமத்துவ சித்தாதங்கள் மற்றும் புரட்சிகர கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றவர். தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் எடிட்டிங்கில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஜனநாதன், உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு சென்றபோது மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இயக்குனரை தேடி வந்த உதவியாளர் அவரை உனடியாக மருத்துமனையில் சேர்த்தார்.

சமத்துவம் பேசும் ஜனநாதன்

இந்நிலையில், தீவிர சிக்கிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனநாதன், மூளைச் சாவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவித்தது. கடுமையான வர்க்கபேதம் கொண்ட ஒரு துறையில் முழுமையான சமத்துவம் பேசிய, கடைபிடித்த நல்ல மனிதர் என்றும், நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும் என்றும் அவரின் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: National award winning director s p jananathan passes away tamil cinema expresses deepest condolences

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை: யார் இந்த தீபிகா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com