விருது விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்.. அவரின் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

65 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா  டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைப்பெற்றது. இதில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மாம் படத்தில் நடித்தத்திற்காக  சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.  இந்த விருதைப் பெற்றுக் கொள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இரண்டும் மகள்களும் வந்திருந்தனர்.…

By: Updated: May 5, 2018, 10:46:00 AM

65 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா  டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைப்பெற்றது. இதில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மாம் படத்தில் நடித்தத்திற்காக  சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.  இந்த விருதைப் பெற்றுக் கொள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இரண்டும் மகள்களும் வந்திருந்தனர்.

அதில், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி புடவையில் வந்திருந்தார். பலரும் ஜான்வியைக் கண்டு கட்டி தழுவி வாழ்த்தினர்.  அத்துடன் அவர் கட்டிருந்த புடவை குறித்து பேசினர்.  அதன் பின்பு தான் தெரிந்தது அன்றைய தினம் ஜான்வி அணிந்திருந்த புடவை நடிகை ஸ்ரீதேவியின் ஃபேவரெட் கலக்கெஷனில் ஒன்றாம்.

ஸ்ரீதேவி ஏற்கனவே இந்த புடவையை  நடிகர் ராம்சரண் திருமணத்தில் கட்டி வந்துள்ளார். தனது தாயின் விருதை வாங்கும் போது கட்டாயமாக அவரின் புடவையை அணிந்து தான் விருதை பெற வேண்டும் என்று,  தனது நெருங்கிய நண்பர்களிடம் ஜான்வி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஜான்வியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். மேலுன் தாயின் இறப்பிற்கு பிறகு ஜான்வி இவ்வளவு  பொறுமையுடன்,  பொறுப்புடன் செயல்படுவது  பாலிவுட் பிரபலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:National film awards 2018 janhvi kapoor wears sridevis old sari to collect the best actress award for mom

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X