/tamil-ie/media/media_files/uploads/2019/04/natpe-thunai-2.jpg)
Tamilrockers, Natpe thunai movie download, நட்பே துணை, தமிழ் ராக்கர்ஸ்
Natpe thunai movie in Tamilrockers: ஹாக்கியை மையமாக வைத்து வெளியான நட்பே துணை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது. ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான இந்தப் படம் சூடு குறையாமல் ஆன் லைனில் வெளியிடப்பட்டதால், படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ் சினிமாவில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற விதமாக அத்தி பூத்தாற்போல சில படங்கள் வருவதுண்டு. அப்படி ஒரு படம், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சுந்தர் சி வழங்கியிருக்கும், ‘நட்பே துணை’.
Natpe thunai movie in Tamilrockers: இதற்கு என்னதான் முடிவோ?Natpe thunai movie in Tamilrockers: ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
நட்பே துணை படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ‘ரிவ்வியூ’ நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்களிடம் இருந்து மண்ணை காக்கப் போராடும் கதை என்பதால், பல தரப்பினரிடமும் இதற்கு வரவேற்பு இருக்கிறது.
இந்தச் சூழலில் நட்பே துணை திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. இந்தப் படத்தைத் தேடி இணையதளத்தில் உலவும் சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை எகிறியிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதேபோல புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது சினிமாத் துறையால் சட்டபூர்வ நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை. அடிக்கடி இணையதள முகவரியை தமிழ் ராக்கர்ஸ் மாற்றிவிடுவதால் அரசுத் துறைகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழ் ராக்கர்ஸின் ரசிகர்கள் வட்டம்தான் பெருகிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்னதான் முடிவோ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us