/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-112641-2025-09-08-11-27-02.jpg)
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மலையாளிகள் சங்கத்தினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு விஷயத்தை விவரித்தார். அவர் கூறுகையில், நான் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் எனக்கு என் தந்தை மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தார். அதை இரண்டாக கட் செய்து கொடுத்தார். ஒன்றை கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வரை செல்லும் போது தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். சிங்கப்பூர் சென்றதும் வைத்திருந்த பூ வாடி போகும் என்பதால் இன்னொரு துண்டு பூவை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா செல்லுமாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் சொன்னதின்படி, நான் பாதி மல்லிகைப் பூவை தலையில் சூட்டிக்கொண்டு, மீதியை ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு மல்லிகைப் பூ கொண்டு செல்ல அனுமதி இல்லையென்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், அது தெரியாமல் இருக்கக் கூடாது என்பதையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனினும், என் தந்தை கூறியதுபோலவே, சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் புறப்படும் போது, பூவின் மீதி பகுதியை தலையில் வைத்துக்கொண்டேன்.
அப்போது விமான நிலைய அதிகாரிகள் எனது தலையில் இருந்த பூவைக் கவனித்தனர், எனவே அவர்கள் என்னை சோதனை செய்தார்கள். அதன் விளைவாக, வெறும் 15 செ.மீ. நீளமுள்ள பூவுக்காக எனக்கு 1980 ஆஸ்திரேலிய டாலர்கள் — இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.14 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
நான் அதை வேண்டுமென்று செய்யவில்லை என்றாலும், தவறு என்றால் அது தவறே. இந்த அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என எனக்கு உத்தரவிடப்பட்டது என்று நவ்யா நாயர் சிரித்துக்கொண்டே கூறினார். ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ போன்றவை தடைசெய்யப்படும் முக்கியக் காரணம், அந்நாட்டின் கடுமையான உயிர் பாதுகாப்பு விதிமுறைகளாகும்.
ஆஸ்திரேலியாவின் வேளாண்மை மற்றும் நீர் வளத் துறை, மல்லிகை பூக்கள் உயிர் பாதுகாப்பு அபாயத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறது. குறிப்பாக, மல்லிகை செடிகளில் பூச்சிகள், அவற்றின் முட்டைகள் அல்லது தீங்கு விளைவிக்கும் நோய்கள் இருக்கலாம். இவை ஆஸ்திரேலியாவில் பரவி, உள்நாட்டு தாவரங்கள் மற்றும் விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும்.
மல்லிகை பூக்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் போது பூச்சிகளை அழிக்க மெத்தில் புரோமைடு போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை ஆஸ்திரேலியாவின் சூழலுக்கு போதாமை மற்றும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. எனவே, மல்லிகை பூக்கள் மீதான தடை, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.