Navya Swamy: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை பதினேழாயிரத்துக்கும் அதிகமானார் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றனர்.
உண்மையை நிரூபிக்க ஆதாரத்தை வெளியிட்ட வனிதா! – வீடியோ உள்ளே
ஆட்கள் கூடும் இடங்களில் தான் இந்த வைரஸ் அதிகரிக்கும் என்பதால், பூங்காக்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயம் குறைந்த நபர்களைக் கொண்டு சீரியல் ஷூட்டிங் நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அனுமதி அளித்தன.
இதற்கிடையே டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி சீரியலில் நடித்து புகழ்பெற்றிருந்தார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் அவர், "ஆம் எனக்கு கொரோனா பாசிட்டிவ். நேற்று தான் ரிப்போர்ட் வந்தது. நான் செய்த முதல் விஷயம் ஷுட்டிங்கை நிறுத்தியது தான். நான் கொரோனாவை பரப்புபவராக இருக்க விரும்பவில்லை.
சென்னையில் ஊரடங்கு நீட்டிக்க 88% பேர் விருப்பம்: சென்னை ஐ.ஐ.டி சர்வே
எனக்கு கடந்த மூன்று நான்கு நாட்களாக உடல் சோர்வு மற்றும் தலைவலி இருந்தது. என் மருத்துவர் கூறிய அறிவுரையின் அடிப்படையில் நான் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். தற்போது என்னுடைய ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை. நேற்று இரவு நான் கதறி அழுதேன். இன்று காலை வரை அழுதேன். என்னால் தூங்கவே முடியவில்லை. என் அம்மா இன்னும் அழுது கொண்டிருக்கிறார். என் போன் பிஸியாகவே இருக்கிறது. பலர் என்னுடன் பேசுகிறார்கள். வாட்ஸ்அப்பில் அதிக மெசேஜ்களை வருகின்றன. நான் என்னுடைய சக நடிகர்களை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளேன் என்பதை நினைத்து குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன்." என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் நவ்யாவின் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”