ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தனது நடிப்புத் திறமையால் இந்திய திரையுலகில் முத்திரை பதித்தவர். ஹேராம், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் போன்ற படங்களில் அவருடை நடிப்புத்திறமை வெளிப்பட்டிருப்பதை அனைவரும் காண முடியும். கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே நவாசுத்தீன் சித்திக் நடிப்பை வெகுவாகப் பாராட்டியும் பேசியுள்ளனர்.
பாலிவுட், கோலிவுட் என இந்திய சினிமா உலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கும் நவாசுதீன் சித்திக் தனிப்பட்ட வாழ்க்கைதான் அடிக்கடி ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் அடிபடுவதுண்டு.
நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் - ஆலியா சித்திக் தம்பதியின் குழந்தைகள் ஷோரா யன்னி இருவரும் தனது முழு பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் ஆலியா கோரியுள்ளார்.
ஆலியா சித்திக் மே 7ம் தேதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு நவாசுதீன் சித்திக் வழக்கறிஞர் அட்னன் ஷேக் மூலம் சட்ட ரீதியாக நோட்டீஸ் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஆலியா தன் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்கிறார் என்றும் தனது நடத்தையைப் பற்றி அவதூறு செய்கிறார் என்றும் அதற்கு ஆலியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும், அவருடைய வழக்கறிஞர் ஊடகங்களிடம் கூறுகையில், 15 நாட்களில் ஆலியாவின் நோட்டீஸுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நவாசுதீன் சித்திக் சரியாக புதனாவில் அவருடைய சொந்த நகரத்தில் இருப்பதாகக் கூறினார்.
ஆலியா சித்திக் தனது அறிக்கையில், நவாசுதீன் சித்திக் ஒரு அக்கறையற்ற தந்தை. தனது குழந்தைகளை அவர் சிலமாதங்களாக சந்திக்க வரவில்லை. அவர் பண ரீதியாக தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தனது பொருளாதார ரீதியான பிரச்னைகளைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சட்ட ரீதியாக அனுப்பிய நோட்டீஸில் அதை குறிப்பிடவில்லை.
இது குறித்து நவாசுதீன் சித்திக் வழக்கறிஞர் கூறுகையில், அவருடைய வங்கி இ.எம்.ஐ நவாசுதீன் சித்திக்கால் செலுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கான செலவுக்கும் பணம் அளித்துள்ளார். அவருடைய விவாகரத்து நோட்டீஸுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகு, ஆலியா, நவாசுதீன் சித்திக் மீது அவதுறான பிரசாரங்களை செய்துவருகிறர். தற்போது குழந்தைகள் தற்போது தாயுடன் மும்பையில்தான் உள்ளனர்.
ஆலியா சித்திக் ஒரு பேட்டியில் “நவாசுதீன் சித்திக் ஒருபோதும் என் மீது கை வைத்து அடித்ததில்லை. ஆனால், வசைகளும் வாதங்களும் தாங்க முடியாததாகிவிட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது சகோதரர் என்னை அடித்துள்ளார். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் மட்டுமே தங்கியிருந்தார்கள். எனவே, நான் பல ஆண்டுகளாக நிறைய தாங்கி வருகிறேன். அவரது முதல் மனைவியும் இந்த காரணத்திற்காக அவரை விட்டுவிட்டார். அவர்கள் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் அவர்கள் வீட்டின் மனைவிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நான்கு விவாகரத்துக்கள் நடந்துள்ளன. இது ஐந்தாவது. இது அவரது குடும்பத்தில் ஒரு முறையாக உள்ளது.. மற்றவர்களுக்கு முன்பாக சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக நீங்கள் நிறைய மறைக்க முடியாது. ஆனால் நீங்கள் எவ்வளவுதான் காதலுக்காக பொருத்துக்கொள்ள முடியும்.?” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.