நடிகை வித்யா பிரதீப் கேரளாவில் பிறந்தவர் என்றாலும் அவருடைய அப்பா ராணுவத்தில் பணி புரிந்ததால், அவர் பெற்றோருடன் பல இடங்களில் வசித்து இருக்கிறார். வித்யா மலையாளம் மட்டுமில்லாமல் தமிழையும் அழகாகப் பேசுகிறார்.
பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள், சினிமாவில் வாய்ப்பு குறைந்த பிறகு, சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க வருவார்கள். ஆனால், நடிகை வித்யா பிரதீப் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சின்னத்திரையில் முக்கிய நடிகையாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில், வித்யா பிரதீப் டாக்டர் மற்றும் ஆராய்ச்சியாளராக கல்வியிலும் முன்னேறி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/vidya-pradeep-2.jpg)
நடிகை வித்யா பிரதீப் முதலில் நடிக்கப் போகிறேன் என்று அவருடைய வீட்டில் தெரிவித்தபோது, அவருடைய குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும், கல்லூரி படித்து முடிக்கும் வரை மாடலிங், நடிப்பு என எதுவும் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.
அதனால், கல்லூரி படித்து முடித்த பிறகு, வித்யா பிரதீப் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். டாக்டராகவும் ஆராய்ச்சியாளராகவும் பிசியாக இருக்கும் நேரத்திலும் மாடல்ங்கில் விதவிதமான புகைப்படங்களை எடுத்தார். வித்யா சினிமாவில் நடிப்பதற்கு முன், பல நகை விளம்பரங்களிலும், புடவை விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/vidya-pradeep-3.jpg)
விளம்பரங்களில் நடித்து வந்த வித்யாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஜெய் உடன் நடித்த படம் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. சைவம் படத்தில் குட்டி பாப்பாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதில் வித்யாவின் நடிப்பு கவனிக்கப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்குப் பிறகு, நடிகை வித்யா அருண் விஜய், கிருஷ்ணா, ஜெய், சமுத்திரக்கனி போன்ற பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அந்த நேரத்தில் தான் வித்யாவுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நாயகி சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பிரதீப், விரைவிலேயே சீரியலில் இருந்து விலகினார். நாயகி சீரியலில் இருந்து வித்யா விலகியது பற்றி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனாலும், நடிகை வித்ய பிரதீப் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான், வித்ய பிரதீப் தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் திருமண நாளில் கணவர் குறித்து புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு உள்ளார். அதில், “13 ஆண்டுகளுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்துள்ளேன். அவர் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/vidya-pradeep-4.jpg)
மேலும், “இந்த நேரத்தில் என் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அழகையும் அர்த்தத்தையும் படம் பிடிக்க வார்த்தைகள் போதாது. எண்ணற்ற நினைவுகளை என்றென்றும் போற்றும் வகையில் உருவாக்கியுள்ளோம். நீங்கள் எப்போதும் எனக்காக இருந்திருப்பீர்கள். என்னை உங்கள் முன்னுரிமை ஆக்கி என்னை மிகவும் முழுமையாக உணர செய்தீர்கள். உங்கள் நிபந்தனை அற்ற அன்பு என்னை அளவு கடந்த பணக்காரராக உணர வைக்கிறது. நீங்கள் என்னை ஒரு விலை உயர்ந்த குழந்தையை போல கவனித்து கொள்கிறீர்கள். கடவுளே இந்த 13 அழகான வருடங்களுக்கும் இன்னும் பல வருடங்களுக்கும் நன்றி.. உன்னுடன் என் வாழ்க்கை அழகாக இருக்கிறது” என்று தன்னுடைய கணவர் குறித்து வித்யா பிரதீப் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். வித்யாவின் திருமண நாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/vidya-pradeep-1.jpg)
இதுவரை வித்யா பிரதீப்பிற்கு திருமணம் ஆன செய்தியை அறியாத ரசிகர்களுக்கு அவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும், நடிகை வித்யா பிரதீப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“