நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இதனால், மூக்குத்தி அம்மன் திரைப்படம் திட்டமிட்டவாறு தீபாவளிக்கு ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டு அது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தாண்டி ஈர்த்து பரவி வருகிறது. கொரோனா பரவல் அச்சத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், மூக்குத்தி அம்மன் படம் ஓ.டிடி-யில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி ரிலீஸாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் மனு வழங்கியுள்ளனர். இந்த படத்தில், சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மூக்குத்தி அம்மன் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவரக்ள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Nayanthara acted mookuthi amman police complaint to stay release
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% ஒப்புக்கொண்டார்? – திருமாவளவன் கேள்வி
ராகுல் காந்தி, அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் : முழு விவரம் உள்ளே
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை
மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்; மீண்டும் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?