ஜெயம் ரவி – நயன்தாரா படத்திற்கு ஏ சர்டிபிகேட்; யூடியூபில் வெளியான டிரையிலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு
ஜெயம் ரவி – நயன்தாரா நடித்துள்ள படத்திற்கு சென்சார் போர்டு ’ஏ’ சர்டிபிகேட்டை அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தனி ஒருவன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் இறைவன். இதனால் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற வியாழன் அன்று வெளியாக உள்ளது.
இந்த படத்தை என்றென்றும் புன்னகை, உதயநிதி நடித்த ’மனிதன்’ படத்தை இயக்கிய ஐ.அகமது இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் போஸ் ’இறைவன்’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் நரேன், விஜயலெட்சுமி, பகவதிபெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இறைவன் படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழை அளித்துள்ளது. அதாவது குழந்தைகள் பார்ப்பதற்கு இந்த படம் ஏற்றதல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதனால் A சான்றிதழ் அளிக்கும் அளவுக்கு படத்தில் என்ன காட்சிகள் உள்ளன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் என்ற அதிர்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
Advertisment
Advertisement
வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் ஏ சர்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜெயம் ரவி ரத்த கறைகளுடனும் கத்தியுடனும் காட்சியளித்துள்ளதால் இந்த படத்தில் வன்முறை அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு ஏ சர்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது, அதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“