/indian-express-tamil/media/media_files/GMrlaCwQz4t3KM5UeKxb.jpg)
10 ஆண்டுகளுக்கு பின்னர் நயன்தாரா- நஸ்ரியா சந்தித்துள்ளனர்.
நடிகைகள் நயன்தாராவும், நஸ்ரியாவும் மீண்டும் இணைந்துள்ளனர். ராஜா ராணி படத்துக்கு பின்னர் இருவரும் திரையில் இணையாவிட்டாலும் நிஜத்தில் சந்தித்து பரஸ்பரம் அன்பை பறிமாறிக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது நயன்தாரா கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நஸ்ரியா கணவர் ஃபகத் ஃபாசில் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்தப் புகைப்படங்களை மாலை மறக்கமுடியாத இரவு என்ற தலைப்பில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், ஃபகத் ஃபாசில்லையும் இனிமையானவர் எனக் கூறியுள்ளார்.
நயன்தாராவும், நஸ்ரியாவும் ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்தனர். அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் காதலர்களின் சிறந்த படமாக இன்றளவும் உள்ளது. படத்தில் கோரமான விபத்தில் இறக்கும் ஆர்யாவின் காதலியாக நஸ்ரியா நடித்திருப்பார்.
பின்னாள்களில் நயன்தாராவை ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்வார். நயன்தாராவும் ஜெய்-ஐ காதலித்து இருப்பார். ஆனால் அந்தக் காதல் கைகூடாது. இந்தப் படத்தின் பல்வேறு காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.