Advertisment
Presenting Partner
Desktop GIF

அரசியல் ஆசை: யாருக்காக காத்திருக்கிறார் நயன்தாரா?

நயன்தாராவின் சமீபகால நடவடிக்கைகளை உற்று நோக்கினால் அவர் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஒரு பாதையை நோக்கி செல்வதை உறுதிப்படுத்த முடிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara and Politics, Nayanthara in politics, Actress Nayanthara, நயன்தாரா, நயன்தாரா அரசியல் ஆசை, அரசியலில் நயன்தாரா

Nayanthara and Politics, Nayanthara in politics, Actress Nayanthara, நயன்தாரா, நயன்தாரா அரசியல் ஆசை, அரசியலில் நயன்தாரா

நயன்தாரா, போட்டியின்றி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனி நாயகியாக அவர் நடிக்கும் படங்கள் கலெக்‌ஷனில் குறை வைக்கவில்லை. அடுத்து, அரசியல்தானா? விமர்சகர் திராவிட ஜீவா தனது கருத்துகளை இங்கே வைக்கிறார்.

Advertisment

திராவிட ஜீவா

கலையும், அரசியலும் சங்ககாலத்திலிருந்தே ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்! தமிழகத்தில் நடிப்பிசைப் புலவர் ராமசாமி காலத்திலிருந்து கலைவாணர், கலைஞர், எம் ஜி ஆர், ரஜினி போன்ற ஆளுமைகளின் அரசியல் செல்வாக்கு அனைவரையும் உறுத்தியது; உறுத்திக் கொண்டிருக்கிறது.

அதேசமயம் உலகப்பெருங்கலைஞன் சிவாஜி, ஒரு பெரும்பாடம். அதைவிட அரசியலில் நிலைப்பது என்பது நடுக்கடலில் நீந்துவதற்கு சமம் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு விஜயகாந்த். பெண் கலைஞர்களில் வி. என். ஜானகி, வைஜெயந்திமாலா, வெண்ணிற ஆடை நிர்மலா, லதா, ராதிகா போன்றவர்களை நினைவில் கொள்வதில்லை. ஆனால் ஜெயலலிதாவை நினைவில் நிறுத்துகின்ற‌னர். அதற்கு காரணம் ஜெயாவின் தேர்தல் வெற்றி!

ஆனால் ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் மட்டுமல்ல, அவர் முதலமைச்சராக வரும் வரை அவர் அடைந்த துயரங்கள் யாருக்கும் நினைவிற்கே வருவதில்லை. மிக பிரபலமான நடிகை குஷ்பூவின் அரசியலும் தற்போது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியுள்ளது.

நடிகைகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகாலம் திரையில் நிலைக்கலாம் கடந்த காலங்களில்! ஆனால் சமீபகாலமாக சில நடிகைகள் பத்தாண்டுகளை தாண்டி திரையில் நீடிக்கின்றனர் அதற்கு சிறப்பு காரணங்கள் எல்லாம் எதுவும் இருப்பதாக தெரிவதில்லை.

நடிகைகளுக்கென்று தனியாக ஒரு ஆதரவு கூட்டம் என்பது தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்குமா? என்பதையெல்லாம் ஆராய்ந்தால் பதில் பூஜ்யமே! இதற்கு குஷ்பூவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரசிகர்களிடம் ஈர்ப்பு குறையாமல் இருப்பது சிலருக்கு வாய்த்தாலும் அது மிகப்பெரிய செல்வாக்காக மாறும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

ஆனால் நடிகை நயன்தாரா கடந்த பத்து ஆண்டுகளாகவே சர்ச்சைகளின் ராணியாக இருக்கிறார். அது அவரின் பெயரை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரதானமாக்கி பிரபல பட்டியலில் வைத்திருக்க உதவியுள்ளது. அந்த சர்ச்சைகளினால் கிடைத்த பிரபலத் தன்மையை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நேர்மறை நாயகியாக்கி தன்னுடைய இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளார்.

தயாரிபாளருக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்தார், உதவும் உள்ளம் கொண்டவர், கதைகளை சமூக நோக்குடன் தேர்ந்தெடுக்கின்றார், கதாநாயக பிம்பத்தில் வீழாமல் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொண்ட படத்தில் நடிக்கின்றார், புதுமுக இயக்குநர்களை ஊக்குவிக்கின்றார் என்கிற நேர்மறை பார்வை அவரைப் பற்றி இருக்கிறது.

அதேசமயம், இந்த எல்லைகளைத் தாண்டி நயன்தாராவின் சமீபகால நடவடிக்கைகளை உற்று நோக்கினால் அவர் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஒரு பாதையை நோக்கி செல்வதை உறுதிப்படுத்த முடிகிறது. ஊடகங்களின் மிகப்பெரும் ஆதரவு அவருக்கு இருப்பதுபோல் தோற்றம் அளிக்கப்படுகிறது.

நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ஜெயலலிதாவைப் போன்று எதிர்காலத்தில் உருவாகவேண்டும் என்பதுதான் நயன்தாராவில் ஆசை என குறிப்பிடுகின்றனர். தமிழக அரசியலில் நிச்சயம் அவர் எதாவது ஒரு வடிவத்தில் பங்கேற்பார் என்றும் உறுதியாக கூறுகின்றனர்.

இதற்காக இரண்டு பெரிய நடிகர்களின் அரசியல் வரவை நயன் எதிர்நோக்கியுள்ளார். அவர்கள் யாரென்று சொல்ல வேண்டுமா என்ன? நயன், குஷ்பூவிற்குபோட்டியா? என்பதை காலம் சொல்லும் பதிலுக்கு காத்திருப்போம்.

 

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment