2019 புத்தாண்டு கொண்டாட சிட்டாக பறந்த பிரபல ஜோடி…

2019 புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் லாஸ் வேகாஸ் பறந்துள்ளனர். கோலிவுட்டின் சூப்பர் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டை வரவேற்க தங்களது விருப்பமான லாஸ் வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு அஜித்துடன்…

By: December 31, 2018, 5:04:07 PM

2019 புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் லாஸ் வேகாஸ் பறந்துள்ளனர்.

கோலிவுட்டின் சூப்பர் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டை வரவேற்க தங்களது விருப்பமான லாஸ் வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு அஜித்துடன் இவர் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக வலம் வரும் நயன், அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தளபதி விஜய்யுடன் ‘தளபதி 63’, சிவகார்த்திகேயன் திரைப்படம், அறிவழகன் படம், ’சைரா நரசிம்மா ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’ போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் இவர்களுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதல் பற்றி வெளிப்படையாக கூறவும் இல்லை, மற்றவர்கள் பேசுவதை கண்டுக் கொள்வதும் இல்லை. தமிழ்-தெலுங்கு என கேப் விடாமல் நடித்து வரும் நயன், விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்துக் கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அவரது ரசிகரகளிடையே அதிகரித்துள்ளது.

nayanthara - vignesh shivan new year celebration, நயன்தாரா

nayanthara - vignesh shivan new year celebration, நயன்தாரா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Nayanthara and vignesh shivan fly to las vegas

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X