லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இம்முறை தனது காதலன் விக்ஷேன் சிவனுடன் இணைந்து அமிர்தசரஸ் தங்க கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் செய்த பிரமிக்க வைக்கும் செயல் வீடியோவாக பரவி வருகிறது.
பொற்கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் :
சினிமா ஷூட்டிங் முடித்த பின்னர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோஒவிலுக்கு வெகேஷன் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன்பும் அவர் பொற்கோவில் சென்று வழிபாடு செய்த புகைப்ப்படங்களை நாம் பார்த்திருப்போம்.
நயன்தாரா
ஆனால் இந்த முறை வெகேஷன் பிளானில் ஒரு சின்ன சேன்ஜ் வைத்து பயணித்தார். இம்முறை தனது காதலன் விஷ்னேஷ் சிவனை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் வழிபாடுகளை முடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகிறது.
அதன் பின்னர் கோவிலில் இடம்பெற்றுள்ள லங்கார் பகுதிக்கு சென்றனர். பொற்கோவிலின் சிறப்பு அம்சமே லங்கார் பகுதி தான். இங்கு தினமும் மூன்று வேளையும் அன்ன தானம் செய்யப்படும். இங்கு சாப்பிட வருபவர்கள் சாதி, மதம் மற்றும் வாழ்வாதாரம் வேறுபாடின்றி சமமாக நடத்தப்படுவார்கள்.
காதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்! புகைப்படத் தொகுப்பு
ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே உணவு ஒரே இடத்தின் பரிமாரப்படும். இந்த லங்கார் பகுதிக்கு சென்ற நயன் மற்றும் விக்கி ஜோடி, அங்கு அனைவருடன் அமர்ந்து உணவருத்தினர்.
16, 2018
இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இணையத்தளத்தில் இதையடுத்து, நயன் தாரா மற்றும் அமிர்தசரஸ் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.