New Update
/indian-express-tamil/media/media_files/r30UxYL6L6GxZKEDn1tf.jpg)
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கேரளாவில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு கூட்டாக கடிதம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.
கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நடிகர் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கேரளாவில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு கூட்டாக கடிதம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கேரளாவில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு கூட்டாக கடிதம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்தனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட்டாக அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மக்களுடன் எங்கள் இதயம் இருக்கும். மக்கள் அனுபவிக்கும் பேரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் வழங்குகிறோம். நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் கட்டியெழுப்பவும் குணமடையவும் உதவி செய்ய வலிமை மற்றும் இரக்கத்தில் ஒன்றுபடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள் சூர்யா, மம்முட்டி ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் தவிர தமிழ் சினிமா நடிகர்கள் சூர்யா, விக்ரம், மலையாள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் பாசில், நஸ்ரியா ஆகியோர் கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.