scorecardresearch

மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் விக்கி – நயன் ஜோடி : வைரல் வீடியோ

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் விக்கி – நயன் ஜோடி : வைரல் வீடியோ

மும்பை விமான நிலையில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி வந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர். 5 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு சில நாட்களில் குழந்தைகளின் முகம் தெரியாமல் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்முறையாக குழந்தைகளுடன் பொதுவெளியில் வரும் நயன் விக்கி ஜோடி, சாதாரண உடையில் வந்தனர். மேலும் அவர்களின் குழந்தைகளுக்க ஒரே மாதிரியான செக்கர்ஸ் டங்காரியில் அணிந்திருந்தனர்.

அதே சமயம் நயன்தாராவும் விக்னேஷ்வும் தங்கள் குழந்தைகளின் முகத்தை கேமரா ஃப்ளாஷ்களில் இருந்து மறைத்து கேமராக்களுக்காக சிரித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் இதய ஈமோஜிகளை விட்டுவிட்டு காமெண்டில் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மறுபுறம் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட விக்னேஷ் சிவன் அடுத்து படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara and vignesh shivan spotted at mumbai airport with their twins