/tamil-ie/media/media_files/uploads/2018/05/nayanthara-vignesh-shivan.jpg)
தமிழ் திரையுலகில் சூர்யா - ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக பிரபலமாக கொண்டாடப்படுவது விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் தான். இருவரின் ஜோடி அம்சத்தில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும் உற்சாகமும் அதிகரித்துள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இருவரும் தங்களின் காதல் ஸ்பாட்டான அமெரிக்காவை அடிக்கடி வளம் வருகின்றனர். முன்பு ஒரு முறை இருவரும் அமெரிக்காவில் பொது இடத்தில் எடுத்த புகைப்படம் வைரலானது. கண்ணும் கண்ணும் நோக்கியபடி எடுத்த ஃபோட்டோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வந்தனர்.
,
Special moments and memories???????? #VikkyNayan#LosAngelesCA#Oscars90#ShapeOfDreams ????✌???? pic.twitter.com/UXbjKHwe7c
— Nayanthara✨ (@NayantharaU) March 6, 2018
ரசிகர்களுக்கு அடுத்த ஸர்பிரைஸ் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
,
#Coachella2018#StageCoach
— Nayanthara✨ (@NayantharaU) May 2, 2018
???? ???? great moments ! #VikkyNayanpic.twitter.com/f5ttGG92f7
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.