Advertisment
Presenting Partner
Desktop GIF

டின்னருக்காக 30 நிமிடம் கியூவில் நின்ற நயன்தாரா தம்பதி: ஸ்பெஷல் நாளில் தந்தூரி பார்ட்டி

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் டெல்லியில் தங்களை யாரும் அடையாளம் தெரியாத இடத்தில் ஒரு உணவகத்தில், டின்னருக்காக 30 நிமிடம் கியூவில் நின்று, நயன்தாராவின் பிறந்தநாளை டின்னர் சாப்பிட்டு கொண்டாடிய வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nayanrthara birthday party

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் டெல்லியில் தங்களை யாரும் அடையாளம் தெரியாத இடத்தில் ஒரு உணவகத்தில், டின்னருக்காக 30 நிமிடம் கியூவில் நின்று டின்னர் சாப்பிட்ட காட்சி

தமிழ் சினிமா உலகின் நட்சத்திர தம்பதிகளான நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் டெல்லியில் தங்களை யாரும் அடையாளம் தெரியாத இடத்தில், ஒரு உணவகத்தில், டின்னருக்காக 30 நிமிடம் கியூவில் நின்று, நயன்தாராவின் பிறந்தநாளில் டின்னர் சாப்பிட்டு தந்தூரி பார்ட்டி கொண்டாடிய வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Advertisment

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தன்னை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வந்துள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாரா தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு உயிர் - உலகு என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சினிமா ஸ்டார் ஆகிவிட்டாலே அவர்கள் எளிதாக வெளியே எங்கேயும் செல்லம் முடியாது. எங்கே சென்றாலும் ரசிகர்களின் அன்புத் தொல்லை இருக்கும். எங்கேயும் இயல்பாக போய்வர முடியாது. அதனால்தான், பிரபலங்கள் முதலில் இழப்பது பிரைவஸியைத்தான்.

நடிகை நயன்தாரா தனது 40வது பிறந்தநாளைக் கணவர் விக்னேஷ் சிவன் உடன் டெல்லியில் தங்களை யார் என அடையாளம் தெரியாத ஒரு உணவகத்தில் டின்னருக்காக 30 நிமிடங்கள் வரிசையில் நின்று காத்திருந்து, பிறகு ஒரு இடம் கிடைத்ததும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டாடியுள்ளனர்.

டெல்லில் கேக் டா ஹோட்டலில் ஒரு டேபிளில் அமர்ந்துள்ள நயன்தாரா தம்பதியினர் டின்னருக்காக 30 நிமிடங்கள் காத்திருந்தனர். பின்னர், அங்கே அவர்கள் தந்தூரி வட இந்திய உணவைச் சாப்பிட்டனர். 

நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ம் தேதிக்கு முன்னதாக, இருவரும் புதுடெல்லியில் ஒரு ஹோட்டலுக்கு சென்ற ஒரு வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அந்த ஹோட்டலில் மகிழ்ச்சியாக காணபடுகின்றனர். இருவரும் சிரித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிடுவதைக் காட்டுகிறது.

இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்த பல வருடங்களில் நவம்பர் 17-ம் தேதி மிகச்சிறிய  பிறந்தநாள் ஈவ் கொண்டாடினோம்.

“இந்த பிறந்தநாள் டின்னர் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், தனிப்பட்டதாகவும், நெருக்கமானதாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. பின்னணியில் நிறைய நடக்கிறது. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர இந்த நேரத்தில் இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்தது. இந்த தருணத்தைப் படம் பிடிக்க உதவிய ஒரு இனிமையான அந்நியருக்கு நன்றி.” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், டின்னருக்காக 30 நிமிடங்கள் இருவரும் வரிசையில் நின்று காத்திருந்ததாகவும் பின்னர் ஒரு நடுவில் ஒரு டேபிள் கிடைத்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து நடிகை நயன்தாரா,  “அதுதான் என்றைக்கும் மிகச்சிறந்த பிறந்த நாள் டின்னர், இது உண்மையில் மிகவும் இயல்பாக இருந்தது” என்று கூறியுள்ளார். 

டெல்லியில் தங்களை யார் என அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூட்டம் மிகுந்த ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சினிமா ஸ்டார் நயன்தாரா தனது கணவருடன் ஒரு ஹோட்டலில் இயல்பாக டின்னர் சாப்பிட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த வீடியோ குறித்து ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கூறுகையில், “குறைந்த பட்சம் நயன் மற்றும் அவரது கணவர் எந்த இடையூறும் இல்லாமல் பொது இடங்களில் உணவை ரசித்து சாப்பிடுவது நல்லது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், “அவர்கள் ஜவான் படத்தைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்” என்று கிண்டல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment