scorecardresearch

நயன் – விக்கி திருமணம்… முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

Nayan-Vignesh Wedding Guest List: நான் சந்தித்த ஆண்கள் ஒரு பெண்ணின் வெற்றியை எப்படி தடுப்பது என்று நினைப்பது வழக்கம். ஆனால் அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு என்னை உண்மையாகவே உணர வைக்கிறார்.

நயன் – விக்கி திருமணம்… முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?
Vignesh Shivan and Nayanthara's Marriage

nayanthara Vignesh Shivan Marriage Update : தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியான விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் வரும் 9-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது , மகாபலிபுரத்தில் உள்ள மஹாப்ஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்காக வரும் ஜூன் 8-ந் தேதி திருமண வரவேற்பு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்தில்,தென்னிந்திய திரையுலகம் மற்றும் பாலிவுட்டில் பல நட்சத்திரங்கள கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே விக்கி – நயன் இருவரும் திருணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்தனர். ஆனால்  ஆனால் பல தவிர்க்க முடியாத காரணங்களால், அவர்கள் இந்த முயற்சி கைகூடாத நிலையில், தற்போது ஜூன் 9-ந் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நெற்றிக்கண் படத்தின் ப்ரமோஷன் சமயத்தில் நயன்தாரா தனது நி்ச்சியதார்த்தத்தை உறுதி செய்தார்.

தொடர்ந்து திருமணத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அதே வேளையில், தம்பதியினர் தங்களது சினிமா வட்டார நண்பர்களுக்காக பிரமாண்டமான திருமண ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் சமந்தா மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முடிந்தவரை பிரமாண்டமாக இருக்கும்,” என்று கூறப்படுகிறது.

நயன்-விக்னேஷ் திருமண விருந்தினர் பட்டியல்

இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 5.30 மணி முதல் 7.00 மணிக்குள் இந்து முறைப்படி திருமணம் நடைபெறும். இந்த விழாவில் சுமார் 200 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

வின்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா கூறுகையில், தனது வாழ்க்கையில் சந்தித்த ஆண்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது. “நான் அவரைப் பற்றி (விக்னேஷ் சிவன்) பல இடங்களில் பேசவில்லை. நான் சந்தித்த ஆண்கள் ஒரு பெண்ணின் வெற்றியை எப்படி தடுப்பது என்று நினைப்பது வழக்கம். ஆனால் அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் நிறைய வேலை செய்ய ஆரம்பித்தேன். அவர் என்னை உண்மையாகவே உணர வைக்கிறார். என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் விக்னேஷ் சிவன் தனது தாய் மற்றும் சகோதரியையும் கவனித்துக்கொள்கிறார். பொதுவாக ஆண்கள் தங்கள் தாய் மற்றும் சகோதரிகளை பெண்களைப் போல கவனிப்பதில்லை, ஆனால் அவர் அப்படி இல்லை. ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் அவர்கள் சாப்பிட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara and vignesh shivan wedding venue gust list and marriage timing