'புடிச்சத பண்ணுனா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்' தெறிக்க விட்ட நயன்தாரா பட ட்ரெயிலர்
இயக்குனர் நைலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர், வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இயக்குனர் நைலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர், வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இயக்குனர் நைலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர், வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக இருந்து வந்த பல தளைகள் உடைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகனை மையமாக வைத்து மட்டுமே படங்கள் வெளியான நிலையில், 10 ஆண்டுகளாக கதாநாயகிகளை மையமாக வைத்து மட்டுமே பல படங்கள் வந்துள்ளன. அந்த வகையில், நடிகை நயன்தாரா நடித்த கோல மாவு கோகிலா, அறம், அமலா பால் நடித்த கடாவர், ஆடை, ஜோதிகா நடித்த ராட்சசி, 36 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வகையில், நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள படம்தான் அன்னபூரணி. இந்தியாவின் மிகச் சிறந்த சமையல் கலைஞராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒரு பெண் தனது லட்சியத்தை அடைகிறாளா என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் நயன்தாரா உடன் நடிகர் ஜெய் நடித்துள்ளார். தமண் எஸ் இசையமைத்துள்ளார். இந்தியாவின் சிறந்த சமையல் கலைஞர் போட்டியில் கலந்துகொள்ளும் அன்னபூரணி அவள் தடைகளைத் தாண்டி அந்த போட்டியில் வெற்றி பெற்றாளா என்பதை மிகவும் சுருக்கமாக சொல்லி இருக்கிறது அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர்.
Advertisment
Advertisements
இந்த படத்தின் ட்ரெய்லரில், ‘பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார், என்பதற்காக லட்சம் கண்டக்டரும் சூப்பர் ஸ்டாராக ஆக முடியாது. அது போலத்தான், எல்லாரும் இந்தியாவின் தி பெஸ்ட் செஃப் ஆக முடியாது’ என்ற வசனத்துக்கு, நயன்தாரா, ‘புடிச்சத பண்ணுனா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்’ என்ற வசனத்தைக் கூறி லட்சியத்தை அடைய போராடும் எல்லோருக்கும் ஊக்கம் அளித்திருக்கிறார். அன்னபூரணி ட்ரெய்லரே முழு படத்தையும் பார்த்த உணர்வைத் தருகிறது. அன்னபூரணி ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாராவின் அன்னபூரணி படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று ட்ரெய்லரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“