/tamil-ie/media/media_files/uploads/2020/12/viki-nayan.jpg)
தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் படம் அண்ணாத்தே. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா முன்னனெச்சரிக்கை நடவடிக்கைளுடன் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சி துவங்க உள்ள ரஜினிகாந்த் அதற்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று முழுவீச்சில் நடித்து வருகிறார். மேலும் நயனதாரா, குஷ்பூ மற்றும் மீனா ஆகியோரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.
இதில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக, அரசு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் படக்குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் உயிர்பாதுகாப்பு வளையத்தில் இருந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், உயிர்பாதுகாப்பு வளையத்தில் இருந்து யாரும் வெளியேறவோ, அல்லது வெளியாட்கள் உள்ளே செல்லவே அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னணி நடிகையான நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக ஹைதராபாத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், காதலர்கள் இருவரும் ஒரே நகரத்தில் இருந்தபோதிலும், கொரோனா பாதுகாப்பு காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சந்திக்க முடியவில்லை, இதனால் இவர்கள் இருவரும் பெரும் ஏமாற்றம் அடைந்த்தாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.