New Update
/
நடிகை நயன்தாரா தான் தொடங்கியுள்ள 9Skin அழகு சாதன பொருள் பிசினஸைக் கனடாவிலும் கடைவிரித்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா சினிமாவில் பிஸியாக இருந்தாலும், அதே நேரத்தில் பிசினஸிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் 9Skin அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கனடாவிலும் தனது தொழிலை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் தனது கணவர் மற்றும் இரு மகன்களுடன் சுற்றுலா சென்ற நடிகை நயனதாரா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்தியாவில் அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின் வரை விற்பனை செய்து வரும் நயன்தாரா-வின் நிறுவனம் மார்ச் 11 முதல் கனடாவில் புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சருமத்தை பராமரிக்கும் தனது 9Skin அழகு சாதன பொருட்களை கனடாவில் வாழும் ரசிகர்களும் இன்று முதல் வாங்கிப் பயன்படுத்தலாம் என பதிவிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள ஸ்கின் கேர் பற்றிய பதிவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.