/tamil-ie/media/media_files/uploads/2018/03/3-9.jpg)
காதல் பறவைகளாக பறந்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீப காலமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்தன. இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், நயன்தாராவிற்காக விக்னேஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாற இருக்கிறார் எனவும் செய்திகள் வெளிவந்தன.
இதுத்தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு இந்த காதல் ஜோடி பதில் அளிக்க மறுத்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரௌடிதான்’ தான் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். காதம்பரி என்ற கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இவருக்கு இந்த படம், மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது. அதன் பிறகு, நயன் - விக்னேஷ் ஜோடி பல இடங்களில் ஒன்றாக செல்ல ஆரம்பித்தனர்.
,
Bye bye USA ???????????? ????????????
— Vignesh Shivan (@VigneshShivN) March 5, 2018
We take back some great moments & positivity u’ve given us :)
And promise to come back soon :)
We’ll see u soon :)
#LosAngeles#Malibu#SantaMonicapic.twitter.com/ol0UyQ3xnJ
விருது விழாவில் தொடங்கி, கடை திறப்பு விழா வரை எங்குச் சென்றாலும் பிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்களின் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன. அமெரிக்காவில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் காதல் ரசம் சொட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த ஃபோட்டோக்களை விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.