நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற அவரின் திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கை கதை அடங்கிய ஆவணப்படம் வெளியாக உள்ளது. நெட்ஃபிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது நயன்தாராவின் வாழ்க்கை கதையும் இணைத்து ஆவணப்படமாக வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா திரைத்துறையில் வளர்ந்தது 20 வருட திரைத்துறை பற்றிய அனுபவங்களை அதில் பகிர்ந்துள்ளார். ஆவணப்படம் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் இருக்கும். நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உயிர், உலகம் என 2 குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, தோழியாக, நடிகையாக இருப்பது என இதுவரை அவரைப் பற்றி சொல்லப்படாத விஷயங்கள் இடம்பெற உள்ளது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“