scorecardresearch

கோலிவுட் வதந்தி: சென்னையில் பிரபல தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா?

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா விலைக்கு வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Nayanthara buys a theater in chennai, Agasthiya theater, Kollywood rumour, கோலிவுட் வதந்தி, சென்னையில் பிரபல தியேட்டரை வாங்கிய நயன்தாரா, அகஸ்தியா தியேட்டர், Nayanthara buys 50 year old theater, chennai, Kollywood rumours on Nayanthara
நயன்தாரா

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா விலைக்கு வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் தனது இடத்தை 10 ஆண்டுகளுக்கு மேலாக விடாமல் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் நடிகை நயன்தாரா. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான அகஸ்தியா திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி உலா வருகிறது. இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் சொந்தமாக தியேட்டர் வைத்துள்ளனர. பழம்பெரும் நடிகர்கள் சிவாஜி கணேசன், நாகேஷ் உட்பட பலரும் தியேட்டர் வைத்திருந்தனர். அந்த வரிசையில், தற்போது நடிகர் விஜய் உள்பட சில நடிகர்கள் தியேட்டர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சென்னை அகஸ்தியா தியேட்டர் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு பாலச்சந்தரின் ‘பாமா விஜயம்’ என்ற திரைப்படம் முதலில் வெளியானது. அதற்கு பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜீத் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வெளியிட்ட அகஸ்தியா தியேட்டர், சென்னை தண்டையார் பேட்டையில் உள்ளது. அகஸ்தியா தியேட்டர் லாபம் இல்லாதாதால் 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. 50 ஆண்டுகள் பழமையான இந்த தியேட்டரைத்தான் நயன்தாரா வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி உலா வருகிறது. இது வதந்தியா உண்மையா என்பதை நயன்தாராதான் கூற வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara buys 50 year old theater in chennai kollywood rumours