விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகீரங்கமாக கூறிய நயன்தாரா!

நயன் எப்போதுமே காதல், கல்யாணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார் என்பது பரவலான பேச்சு.

By: Updated: March 24, 2018, 03:59:31 PM

விருது மேடையில்,   ’வருங்கால கணவருக்கு நன்றி’ என்று நயன்தாரா கூறிய ஸ்பீட்ச் தான்  இன்றைய டாக் ஆஃப கோலிவுட்டாக மாறியுள்ளது.

சென்னையில் நடைப்பெற்ற விருது விழா ஒன்றில் நடிகை நயன்தாரா கலந்துக் கொண்டார்.  இதில் அவருக்கு இந்த ஆண்டிற்கான மின்னும் நட்சத்திரம் என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.  விருதை பெற்றுக் கொள்ள மேடை ஏறிய நயனுக்கு மைக் கொடுக்கப்பட்டது.

கண்டிப்பாக ஏதாவது பேசிட்டு தான் செல்ல வேண்டும் என்று  தொகுப்பாளர்கள் வழக்கம் போல்  தங்களுடைய வேலையை சிறப்பாக செய்தனர்.  நயன்தாராவின் ரசிகர்களாலோ அவர் மேடை ஏறியதும் கரகோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். பின்பு, பேச ஆரம்பித்த நயன் கண்டிப்பாக யோசித்து தெளிவாகவே இந்த வரிகளை பதிவு செய்தார்.

“எனது தாய், சகோதரர், வருங்கால கணவருக்கு நன்றி. நான் இப்போது வாங்கியுள்ள இந்த விருது சினிமா விருதுகளிடம் இருந்து மிகவும் மாறுப்பட்டது. நான் வீட்டிற்கு திரும்பியது என்னை சுற்றி  பல சாதனை பெண்கள் வலம் வருவார்கள். அவர்களை பார்த்த பின்பு நான் மீண்டும் உத்வேகம் அடைந்து எனது வேலையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பேன்” என்று தெரிவித்தார்.

 

நயனின் இந்த பேச்சு கைத்தட்டல்களை அள்ளியது. அதனுடன், புதிய  தகவல் ஒன்றையும் கோலிவுட் வட்டாரங்களுக்கு தந்துள்ளது. வருங்கால கணவருக்கு நன்றி என்று நயன் கூறியது விக்னேஷ் சிவன் தான் என்று அனைவருக்கும் தெரிந்தது., அதே சமயத்தில் பொதுமேடைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நயன் எப்போதுமே காதல், கல்யாணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார் என்பது பரவலான பேச்சு.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா சமீபத்தில் நியூயார்க் நகரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக   பரவியது. இந்த புகைப்படங்கள் குறித்தும் இந்த ஜோடிகள் பதில் அளிக்க மறுத்து வந்தனர். இந்நிலையில், மேடையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று கூறியிருப்பது இந்த ஜோடி விரைவில் திருமணத்திற்கு தயாராகி விட்டத்தை காட்டுவதாக பேச்சுகள் அடிப்பட ஆரம்பித்துள்ளன.

விழாவில் நடிகை நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Nayanthara calls vignesh shivan her fiance wedding on the cards

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X