காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா! பிரபலங்கள் வாழ்த்து!

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார்.

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா! பிரபலங்கள் வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் சமந்தாவும், விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர்.

Advertisment

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார்.  மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நயன்தாரா, சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியா உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து ஒரு ராணி போல திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.

நயன்தாராவின் பிறந்தநாள் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிறந்தநாள் கேக்கை வெட்டும் நயன்தாரா மஞ்சள் நிற டாப் உடன் நீல நிற ஜீன்ஸ் அணிந்து அழகாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவன் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்துகிறார்.

Advertisment
Advertisements

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலிக்க ஆரம்பித்தனர். நயன்தாராவின் பிறந்தநாளான இன்று, விக்னேஷ் விரைவில் வெளிவரவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய தோற்றத்தை பகிர்ந்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மனி, தங்கமே, என் எல்லாமே. உன்னுடனான வாழ்க்கை முழுமையான அன்பும், பாசமும் நிறைந்தது. நீ எப்போதும் போல் அழகாக இருக்க கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன், சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், தனது நெற்றிக்கண் திரைப்படத்தை விளம்பரப்படுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா தனது நிச்சயதார்த்த மோதிரம் குறித்து பேசினார்.

நயன்தாரா கடைசியாக ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். அதற்கு முன் கொரிய திரைப்டம் பிளைண்ட் படத்தின் ரீமேக்கான நெற்றிக்கண்ணில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: