Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்துவாக மதம் மாற்றம்: திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள விருப்பிய நயன்தாரா!

கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நயன்தாரா, 2011ல் இந்து மதத்திற்கு மாறினார். திருப்பதி கோவிலில் இந்து திருமணத்தை நடத்த விரும்பிய அவர், சில பிரச்சினைகளால் இடத்தை மாற்ற வேண்டியிருந்தது.

author-image
WebDesk
New Update
Nahag

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் ஆடம்பரமான மற்றும் கனவுகள் நிறைந்த திருமணங்களில் ஒனறாக நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த ஜோடிக்கு காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு வரை இருவரும் டேட்டிங் செய்து வந்தனர்.

Advertisment

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்தை திருப்பதி கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத சிலவ காரணங்களால் அது நடக்கமால் போனதால், மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் இது அனைத்தும் பத்து நாட்களில் திட்டமிடப்பட்டது. டயானா குரியனாக பிறந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபோது தனது பெயரை நயன்தாரா மாற்றிக்கொண்டார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு மதம் மாறிய அவர், விக்னேஷ் சிவனை திருப்பதி திருமலை கோவிலில் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல், மற்றும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் உள்ளிட்ட பல பிரபல திருமணங்களின் பின்னணியில் இருந்த ஷாதி ஸ்குவாட் குழுவால் நயன்தாராவின் திருமணத்தை திட்டமிடப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் கேமராவிடம் பேசிய, ஷாதி ஸ்குவாட்டின் டினா மற்றும் சவுரப் ஆகியோர் பகிர்ந்து “திருப்பதியில் திருமணம் நடக்க வாய்பிபில்லை என்று தெரிந்தவுடன், நாங்கள் உடனடியாக சென்னைக்கு பறந்தோம். இடம் மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் தேதியை மாற்ற விரும்பவில்லை. இதற்காக ஒரே இரவில் சுமார் 7,000 பேர் வேலை செய்தனர்.

திருமண நாளில், சுமார் 200 பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டமைப்பை நிர்வகிப்பதற்காக பணியமர்த்தப்பட்டனர். அந்த இடத்தில் யாருடைய தொலைபேசியும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து நயன்தாரா கூறுகையில், “அந்த நேரத்தில் நாம் அதை இழுக்க முடியுமா என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன். வெறும் 10 நாட்களில் ஒரு பிரமாண்டமான திருமணத்திற்கு அனைத்தையும் ஒன்றிணைக்க, சாத்தியமற்றதாகத் தோன்றியது.

கிறித்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால், வழக்கமான இந்து திருமணத்தை விரும்பினேன் என்று கூறியுள்ள நயன்தாரா, “நான் ஒரு கிறிஸ்தவனாக பிறந்ததால், என் அம்மா எப்போதும் என்னை அந்த கிறிஸ்தவ உடையில் பார்க்க விரும்பினார். ஒரு வகையான திருமண கவுன். ஆனால், நான் இந்துவாகிவிட்டதாலும், இந்து திருமணத்தையே செய்ய வேண்டியதிருப்பதாலும், இது இந்து, கிறிஸ்தவ திருமணங்கள் இரண்டையும் இணைத்து அழகாகக் கலக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஆங்கிலத் தொடுப்பில் இந்து திருமணத்தை நடத்தினோம் என்று கூறியுள்ளார்..

நயன்தாரா தனது சிறப்பு நாளுக்காக, சிவப்பு நிற புடவையைத் தேர்வு செய்தார். அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் பெயர் இருந்தது. இது குறித்து அவர் கூறுகையில், “கஞ்சீவரம் புடவை பாதையில் நான் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் நான் எனது பல படங்களில் அதை பல அணிந்துள்ளேன். திருமணத்தில் அதே மாதிரி அணிந்தால், அது என் திருமணமாக இருக்காது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் எதையும் திட்டமிடவில்லை.

இருப்பினும், தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இறுதியில் விக்னேஷ் ஆகியோரின் கோரிக்கையின் பேரில், அவர்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவே மெஹந்தி விழாவைக் கொண்டாடினர். "திருமண நாள் வரை, நான் என் திருமணத்தைச் சுற்றி விஷயங்களைச் சரிபார்த்து, ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் என் திருமண முக்காடு போட்ட பிறகு, ஒரு உணர்ச்சி அலை என்னை மூச்சுவிட கூட முடியாத அளவுக்கு கடுமையாக தாக்கியது என்று கூறியுள்ளார்.

நயன்தாராவின் திருமணத்தில் ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான், அட்லீ, சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட இந்திய சினிமாவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து, தம்பதியினர் ஆசி பெற திருப்பதி கோவிலுக்கு சென்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இப்போது உயிர் மற்றும் உலகம் என்ற இரண்டு மகன்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vignesh Shivan Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment