Advertisment
Presenting Partner
Desktop GIF

அவரை திருமணம் செய்ததால் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்: விக்னேஷ் சிவன் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

தன்னை திருமணம் செய்து கொண்டதற்காக தனது கணவர் விக்னேஷ் சிவன் சந்திக்கும் ட்ரோல்கள் குறித்து நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayanthara vjsh

தன்னை திருமணம் செய்துகொண்டதால், தனது கணவர் குறித்து வரும் ட்ரோல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதால் தான் குற்ற உணர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisment

Read In English: Nayanthara feels guilty for ‘dragging’ Vignesh Shivan into relationship: ‘I feel it would’ve been better if we weren’t together’

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனிடையே சமீபத்தில், அளித்த ஒரு பேட்டியில் பேசிய நயன்தாரா, தனது கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவனை சந்திக்காமல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொண்டதற்காக அவர் ட்ரோல் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தங்கள் இருவரின் சினிமா சாதனை குறித்து எதையும் பொருட்படுத்தக்கூடாது என்று கூறிய நயன்தாரா, மனம் திறந்து பேசியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷின் திருமணம் தொடர்பான வீடியோ சமீபத்தில்நெட்ஃபிக்ஸில் ஆவணப்படமாக நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற பெயரில் வெளியானது. இந்த வீடியோ வெளியீட்டுக்கு முன்னதாக, நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான தனுஷுக்கு எதிராகப் பேசிய நயன் - விக்கி ஜோடி தங்கள் ஆவணப்படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி கொடுக்வில்லை என்று குற்றம்சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தினர்.

Advertisment
Advertisement

இதனிடையே தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில்,“சில நேரங்களில், நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இன்றும் நான் குற்ற உணர்வுடன் இருக்கிறேன். நான் அவரை இந்த உறவுக்குள் இழுத்தேன்; இந்த உறவுக்கான நான் முதல் படி எடுத்தேன். நான் இல்லையென்றால், அவருக்கு சொந்தமாக பெயர் இருந்திருக்கும், மக்கள் அவரை அப்படியே அழைத்திருப்பார்கள்.

அவர் இயக்குனர், எழுத்தாளர்,  பாடலாசிரியர், என்று அவர்கள் அவருக்கு கிரெடிட் கொடுத்திருப்பார்கள்.ஒரு நல்ல மனிதர், அது எனக்குத் தெரியும், ஆனால் அவரைப் போல என்னால் நன்றாக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவர் மீதுள்ள அன்பும் மரியாதையும் சில சமயங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் வெறுப்பால் ‘ஆஃப்செட்’ ஆகிறது “யாராவது வெற்றி பெற்றால், அவர்கள் சமமாக வெற்றி பெற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வெற்றியைத் தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் பணத்தையும் ஆடம்பரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. அது எப்படி கணக்கிடப்படவில்லை.

எங்களது உறவு ‘நிபந்தனையற்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது என்றும், அங்கு ‘தியாகங்கள் மற்றும் சமரசங்கள் இல்லை’ வெளிப்படையாக, அவர் என்னை விட மிகவும் தாமதமாகத் தனது கெரியரை தொடங்கினார். நான் முன்பே வந்துவிட்டதால், ட்ரோல்கள் வருகிறது. ஒருவேளை அவர் தன்னை நிரூபிக்க பிளாக்பஸ்டர்களைக் கொடுக்கவில்லை, அல்லது இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதால் இருக்கலாம். ஒருவேளை நான் ஏற்கனவே வெற்றிகரமாக இருப்பதால், என்னையும் அவரையும் ஒப்பிடுவது மிகவும் நியாயமற்றது என்று நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஏழு வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு 2022 இல் திருமணம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டில், அவர்கள் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக்கை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vignesh Sivan Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment