பிகில் தென்றலுக்கு லேடி சூப்பர் ஸ்டாரின் சர்ப்ரைஸ் கிப்ட்….

Nayanthara gift : பிகில் படத்தில் தென்றல் கேரக்டரில் நடித்து சிங்கப்பெண்ணாய் கர்ஜித்த அம்ரிதா அய்யருக்கு, லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்..

bigil, vijay, atlee, nayanthara, amrita aiyar, football, birthday, gift, bigil movie
bigil, vijay, atlee, nayanthara, amrita aiyar, football, birthday, gift, bigil movie, பிகில், விஜய், அட்லீ, நயன்தாரா, அம்ரிதா அய்யர், தென்றல், கால்பந்து, பிறந்தநாள், பரிசு

பிகில் படத்தில் தென்றல் கேரக்டரில் நடித்து சிங்கப்பெண்ணாய் கர்ஜித்த அம்ரிதா அய்யருக்கு, லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்..

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிங்கபெண்களாக களமிறங்கிய அந்த பிகில் அணியின் கேப்டன் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர்.

விஜய்யின் பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு 200 கோடி வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. விஜய்யின் பிகில் டீமில் இந்துஜா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா அய்யர் உள்ளிட்ட நடிகைகளுடன் சில ரியல் பிளேயர்களும் நடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடிகை அம்ரிதா அய்யர் அசத்தியிருந்தார்.

காளி மற்றும் படைவீரன் படத்தில் நடித்த அம்ரிதா அய்யருக்கு அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில், அவர் நடித்துள்ள தென்றல் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால், பலரும் அவரை தென்றல் என்றே பாராட்டி வருகிறார்களாம்.
சமீபத்தில் பிகில் டீமுடன் அம்ரிதா அய்யர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ஆனால், அப்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவால் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அம்ரிதா அய்யரை திடீரென சந்தித்த நயன்தாரா அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு மற்றும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் போட்டு வைரலாக்கி வருகிறார் நம்ம தென்றல்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara gave surprise gift to bigil amrita aiyar

Next Story
நம்ம நஸ்ரியாவா இது : ஐய்யகோ…ரசிகர்கள் அதிர்ச்சிnazriya nazim, malayalam, actress, neram, raja rani, nayanthra, arya, nivin pauly, fahad fazil, trance, new look, fans
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com