லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் மீது கடுமையாக குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் சனிக்கிழமையன்று கடிதம் வெளியிட்டார்.
நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை எங்களது ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக என் மீதும் கணவர் விக்னேஷ் சிவன் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார் எனக் குற்றஞ்சாட்டியும், அவர் மீது கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் உடன் திரைத்துறையில் நடித்த நடிகைகள் சிலர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம், நெட்டிசன்கள் பலர் திருமண வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் நயன்தாரா, தனுஷிடம் இருந்து படக் காட்சிகளை மட்டும் இலவசமாக பெற விரும்புகிறார் என அவர் மீது விமர்சனம் செய்துள்ளனர்.
‘ஐ ஸ்டாண்ட் வித் தனுஷ்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பலர் தனுஷ்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களும் தனுஷ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“