தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே நயன்தாரா விளக்கு ஒளியில் ஜொலிக்கும்படி எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

நயன் தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்து சென்ற அவர்கள், பின்னர் படப்பிடிப்பு காரணமாக சென்னை திரும்பினர். சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதே நேரத்தில், நயன்தாரா ‘ஜவான்’ படத்தின் படப்பில் பங்கேற்றார்.

இந்நிலையில், நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் தற்போது ஓய்வு கிடைத்துள்ளதால், விடுமுறையைக் கொண்டாட தனி விமானம் மூலம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சென்றுள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரை சுற்றி வருகின்றனர். ஸ்பெயினில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதியதாக திருமணமாகியுள்ள நடிகை நயன்தாரா, ஸ்பெயினில் கழுத்தில் மஞ்சள் தாளி கயிறுடன், விளக்கு ஒலியில் ஜொலிக்கும்படி எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஸ்பெயினில் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”